Homeசெய்திகள்தமிழ்நாடுஇந்தியாவிலேயே வேலைவாய்ப்பு அதிகமாக வழங்குகின்ற மாநிலம் தமிழ்நாடு - அமைச்சர் சிவி கணேசன் பெருமிதம்

இந்தியாவிலேயே வேலைவாய்ப்பு அதிகமாக வழங்குகின்ற மாநிலம் தமிழ்நாடு – அமைச்சர் சிவி கணேசன் பெருமிதம்

-

- Advertisement -

தமிழ்நாடு தொழில் துறை சார்பில் 278 வது மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் மாதவரம் பொன்னியம்மன்மேடு பகுதியில் புனித அன்னாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, (St. Anne’s Arts and Science College) கல்லூரியில் ,மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் தலைமையில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமை தொழிலாளர் நலன் மேம்பாட்டு துறை அமைச்சர் சிவி கணேசன் தொடங்கி வைத்தார்.இந்தியாவிலேயே வேலைவாய்ப்பு அதிகமாக வழங்குகின்ற மாநிலம் தமிழ்நாடு - அமைச்சர் சிவி கணேசன் பெருமிதம்

இதை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சி.வி கணேசன் – இதுவரை 277 வேலை வாய்ப்பு முகாமில்  இரண்டு லட்சத்து 31 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது என்றும்,  மாற்றுத்திறனாளிகளுக்கு 3771 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளாா்.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் – 200க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள்,20.000 த்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்தியேக அரங்கம்,   மாற்றுத்திறனாளிகளுக்கான பட்டப் படிப்பு வரை  பிரத்தியேக வேலை வழங்கும் நிறுவனங்கள், முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதில் 8ஆம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை படித்தவர்களுக்கான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு பதிவு வழிகாட்டுதல்கள்,இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவுகள் செய்யப்பட்டது. ஐ.டி.ஐ./ டிப்ளமோ / நர்சிங் / பார்மஸி / பொறியியல் உள்ளிட்ட துறைகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது.இந்தியாவிலேயே வேலைவாய்ப்பு அதிகமாக வழங்குகின்ற மாநிலம் தமிழ்நாடு - அமைச்சர் சிவி கணேசன் பெருமிதம்

இந்தியாவிலேயே வேலைவாய்ப்பு அதிகமாக கொடுக்கின்ற மாநிலம் தமிழ்நாடு தான் என்றும்  இந்தியாவிலேயே 43% பெண்கள் செல்கின்ற வேலைக்கு செல்கின்ற  மாநிலமாக தமிழ்நாடு வளர்ச்சி பெற்று உள்ளது எனவும்  இதற்குக் காரணம் இந்தியாவே திரும்பி பார்க்க வைத்திருக்கும் வரலாற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று தெரிவித்தார்.  BE  படித்தவர் MA படித்தவர்கள் ஒரு சில கம்பெனியில் தான் இன்டர்வியூக்கு செல்வர்கள் அங்கே  வேலை கிடைக்கவில்லை என்றால் மனம் உடைந்து விடுவார்.

ஆனால் இங்கே 150 நிறுவனங்கள் வேலை வாய்ப்புக்காக கொண்டுவரப்பட்டுள்ளது  10 கம்பெனிகளுக்கு முயற்சி செய்யலாம் எங்கு அதிகமாக சம்பளம் கிடைக்கிறதோ அந்த வாய்ப்பை உருவாக்கி கொடுத்திருக்கின்றோம் என்று தெரிவித்தார். BE.படித்தவர்கள் ஐடிஐ படித்தவர்கள் ,பாலிடெக்னிக் படித்தவர்கள் தான் வேலைக்கு செல்ல முடியும் என்று இல்லை.இந்தியாவிலேயே வேலைவாய்ப்பு அதிகமாக வழங்குகின்ற மாநிலம் தமிழ்நாடு - அமைச்சர் சிவி கணேசன் பெருமிதம்

நான் முதல்வன் திட்டத்தை முக்கியமாக கொண்டு கவனிக்க வேண்டும் மாணவர்கள் என்ன படிக்க வேண்டும் எப்படி படிக்க வேண்டும் என்ன படித்தால் எந்த வேலை கிடைக்கும் அதற்கு உதவி செய்வதற்காக  நான் முதல்வன் திட்டம் செயல்படுகிறது அதனை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்தியாவிலேயே அதிகமாக உயர்கல்வி படிக்கின்ற மாநிலம் தமிழ்நாடு, அதிகமான, தரமானபல்கலைக்கழகங்கள் இருக்கின்ற மாநிலம் தமிழ்நாடுதான். இளைஞர்கள் ,பெண்களுக்கு விடாமுயற்சி வேண்டும் ,நம்பிக்கை வேண்டும் ,தன்னம்பிக்கை வேண்டும், லட்சியம் வேண்டும் , முடியும் என்ற எண்ணத்துடன் முயற்சி செய்ய வேண்டும் .  யாரும் வலிகள் இல்லாமல் பிறப்பதில்லை ,தடைகள் இல்லாமல் வளர்வதில்லை ,ஆகையால் உழைத்தால் மட்டுமே முன்னேற முடியும் . வாழ்க்கையில் உழைத்த முன்னேற வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

 பழங்குயின மாணவர்களிடையே மருத்துவ படிப்பு குறித்து – ஆளுநர் கேள்வி

MUST READ