”எங்கள் முதலமைச்சர் அனுமதித்தால் துறைமுகம் தொகுதியில் எஸ்.பி.வேலுமணியை என்னுடன் வந்து போட்டியிடச் சொல்லுங்கள். வெற்றிபெற்றுக் காட்டட்டும் என அமைச்சர் சேகர்பாபு சவால் விட்டுள்ளார்.
வடசென்னை வடக்குமாவட்ட அதிமுக ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ”இந்தமுறை கொள்த்தூர்ொகுதியில் முதலமைச்சர்மு.க.ஸ்டாலினை நிச்சயமாகோற்கடிப்போம்” எனப் பேசி இருந்தார். அதற்கு பதிலடி கொடுத்துள்ள இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு.
”திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக அன்றைய தினம் கூட்டத்தில் அமைதிப் பேச்சு வார்த்தையில் ஏற்படுத்தப்பட்ட முடிவிற்கு கையெழுத்திடாமல் சென்றது அதிமுக என்று மாவட்ட ஆட்சித் தலைவர் சொல்லி இருக்கிறார். அதற்கு பரிகாரம் தேடுவதற்காக ஏதாவது ஒரு கருத்தை கூற வேண்டும் என்று செல்லூர் ராஜூ கூறி இருக்கிறார். செல்லூர் ராஜூ என்றுமே எங்கள் பக்கம்தான்.ஜெயகுமார் வாய்க்கொழுப்பெடுத்து எங்கள் திராவிட மாடல் முதலமைச்சராக இருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஸ்டாலின் அவர்களை ராயபுரத்தில் போட்டியிட்டுப்பார் என்றார். முதலமைச்சர் அவர்கள் அடக்கத்தோடு சொன்னார்,”நான் தேவையில்லை .சாதாரண ஒரு தொண்டனை நிறுத்துகிறேன். அவரிடம் வெற்றி பெற்று வா” என்று கூறினார்.
அதேபோல் திமுகவின் ஒரு சாதாரண தொண்டனை நிறுத்தினார். பிறகு ராயபுரத்தில் இருந்து ஜெயக்குமார் காணாமல் போய் விட்டார். அதேபோல் எஸ்.பி.வேலுமணியை வரச்சொல். துறைமுகம் தொகுதி தாராளமாக திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. எங்கள் முதலமைச்சர் அனுமதித்தால் துறைமுகம் தொகுதியில் வந்து போட்டியிடச் சொல். வெற்றி பெறட்டும். அதன் பிறகு பேசிக் கொள்ளலாம்.
குற்றங்கள் தடுப்பது ஒருபுறம். குற்றங்கள் நிகழா வண்ணம் அதை பராமரிப்பது ஒரு புறம். நடந்த குற்றங்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பெண்களுக்கு விழிப்புணர்வை, பாலியல் வன்கொடுமையினுடைய தாக்கத்தை விழிப்புணர்வை ஏற்படுத்த முதலமைச்சர்கள் உத்தரவிட்டிருக்கிறார். இன்னார் என்று இல்லாமல் நடைபெறுகிற தவறுக்கு யார் காரணம் என்றாலும் அவர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.