Homeசெய்திகள்க்ரைம்கல்லூரியில் படித்த பெண்ணுக்கு ஃபேஸ்புக் மூலம் காமவலை... வசமாக சிக்கிய சில்மிஷ சீனியர்..!

கல்லூரியில் படித்த பெண்ணுக்கு ஃபேஸ்புக் மூலம் காமவலை… வசமாக சிக்கிய சில்மிஷ சீனியர்..!

-

- Advertisement -

சென்னையை சேர்ந்த பெண்ணிற்கு முகநூல் வழியாக பாலியல் தொல்லை கொடுத்த முன்னாள் கல்லூரி நண்பர் கைது!

வெவ்வேறு கல்லூரியில் படித்த நிலையில் தன்னுடன் கல்லூரியில் படித்த பல்வேறு பெண்களுக்கு முகநூல் வழியாக பாலியல் தொல்லை கொடுத்தது விசாரணையில் தெரிவந்துள்ளது. பாதிக்கபட்ட பெண்கள் புகார் அளிக்காததால் தொடர்ந்து முகநூல் வழியாக பாலியல் கொடுத்து வந்த நபரை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த 26 வயது பெண் ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் நபர் ஒருவர் ஆபாசமாக புகைப்படங்கள் அனுப்பியும் வீடியோ கால் அழைப்பு விடுத்து தொடர்ந்து தொல்லை தருவதாகவும் தொடர்ந்து தொலை தரும் நபர் மீது நடவடிக்கை எடுக்கும்படி சூளைமேடு காவல் நிலைய போலீசாரிடம் புகார் அளித்தார்.


கல்லூரியில் படித்த பெண்ணுக்கு ஃபேஸ்புக் மூலம் காமவலை...வசமாக சிக்கிய சில்மிஷ சீனியர்..!
புகாரில் முகநூல் வழியாக பாலியல் தொல்லை கொடுத்த நபர் சென்னை துறைப்பாக்கத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் தனக்கு ஜூனியர் ஆக சேர்ந்த நபர் என்பதால் அவருடைய முகநூல் நட்பு அழைப்பிற்கு அனுமதி அளித்ததாகவும், அதன் பிறகு Hi  என குறுஞ்செய்தி அனுப்பிய நிலையில் தனது ஜூனியர் என்ற அடிபடையில் பதில் அளித்த நிலையில் உடனடியாக எதிரே இருந்த நபர் ஆபாச புகைப்படங்களை எடுத்து அனுப்பியதாகவும் பிறகு சிறிது நேரம் கழித்து தொடர்ந்து விடியோ கால்   செய்து தொந்தரவு அளித்ததாகவும் என புகாரில் கூறியுள்ளார்.

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சூளைமேடு காவல் நிலைய போலீசார் பெண்ணிடம் முகநூல் வழியாக வந்த புகைப்படங்கள் மற்றும் முகநூல் கணக்கு விவரம் மற்றும் முகநூல் தரவுகளை கேட்டு பெற்று விசாரணை மேற்கொண்டனர். முகநூல் மூலம் பாலியல் தொல்லை அளித்த நபரை கைது செய்ய அவருடைய  முகநூல் கணக்கு விவரங்களை சைபர் க்ரைம் போலீசாருக்கு அளித்து  விவரங்களை சேகரிக்க தொடங்கினர்.

முகநூல் வழியாக அந்த நபர் பயன்படுத்தும் செல்போன் ஐ பி முகவரியை கண்டறிந்து பின்பு அவரை அதன் மூலம் அவர் இருக்கும் இடத்தை பார்த்தபோது சம்பந்தபட்ட நபர் விழுப்புரம் மாவட்டத்தில் இருப்பதை கண்டறிந்த நிலையில் அவரை கைது செய்ய சூளைமேடு காவல் நிலைய போலீசார் தனிப்படை அமைத்து விழுப்புரம் சென்றனர். பிறகு விழுப்புரத்தில் உள்ள வளவனூர் தாலுக்கா எடைபாளயம் பகுதியில் இருப்பதாக சைபர் க்ரைம் போலீசாருக்கு கிடைத்த தகவலின் படி தனிப்படை விரைந்து சென்று அந்த நபரை அவரது வீட்டில் வைத்து கைது செய்து விசாரணைக்காக சூளைமேடு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் விழுப்புரம் மாவட்டம் வளவனூர் தாலுக்கா எடைப்பாளயம் பகுதியை சேர்ந்த தினேஷ்(29) என்பது தெரிவந்தது இதனை அடுத்து கல்லூரி படிப்பு பெண்ணின் பழக்கம் குறித்து விசாரணை செய்த போது அவர் முதலில் விழுப்புரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து அங்கு படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு பின்பு சென்னையில் தனியார் கல்லூரியில் படிக்க இடம் கிடைத்த நிலையில் 2014 ஆம் ஆண்டு சென்னை துறைப்பக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்த நிலையில் அங்கேயும் படிப்பை பாதியில் விட்டுவிட்டு பின்பு பாண்டிச்சேரியில் படிப்பை முடித்ததும் தெரியவந்துள்ளது.

மேலும் விசாரணையில் தான் படிக்க சென்ற இடங்களில் தனது தெரிந்த பெண்களின் பெயர்களை தெரிந்துகொண்டு அவர்களுக்கு முகநூல் அழைப்பு விடுத்து நட்பு அழைப்பு ஏற்கப்பட்ட பின்பு பெண்களுக்கு தொடர்ந்து பாலியல் ரீதியாக புகைப்படங்களை அனுப்புவது மற்றும் விடியோ கால் செய்து தொந்தரவு செய்வது என்பதை தனது வாடிக்கையாக வைத்து வந்துள்ளார் என்பதை போலீசார் விசாரணை செய்து கண்டுபிடித்தனர். பிறகு இந்த நபரால் பல பெண்கள் முகநூல் வழியாக பாதிக்கப்பட்ட நிலையிலும் யாரும் புகார் அளிக்காததால்  தினேஷ் இந்த தொல்லை கொடுக்கும் வேலையை தொடர்ந்து செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் சென்னையில் பெண் பாதிக்கபட்ட பின் அளித்த புகாரின் பெயரில் முதன்முறையாக கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். விசாரணைக்கு பின்பு பெண்ணிற்கு தொல்லை கொடுத்த தினேஷிடம் இருந்து பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் பயன்படுத்திய செல்போனை பறிமுதல் செய்தனர்.

பின்னர் தினேஷ் மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் (BNS Act) மற்றும் தகவல் தொழில் நுட்ப சட்டம் (I.T. Act) ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சூளைமேடு போலீசார் சிறையில் அடைத்தனர். இந்த கைதின் மூலம் தேவையில்லாமல் முகநூல் மற்றும் சமூக வலைத்தளத்தின்  மூலம் பெண்களிடம் தவறாக பேசிவரும் மற்றும் பேச நினைக்கும் நபர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக அமையும் என இந்த வழக்கு குறித்து விசாரணை செய்த போலீசார் தெரிவித்துள்ளனர்.

MUST READ