நடிகர் அருண் விஜய், தனுஷ் குறித்தும் இட்லி கடை படம் குறித்தும் பேசியுள்ளார்.நடிகர் அருண் விஜய் தமிழ் சினிமாவில் வலம் வரும் முன்னணி நடிகர்களில் ஒருவராவார். இவரது நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வணங்கான் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து அருண் விஜய் நடிப்பில் ரெட்ட தல எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் அருண் விஜய், தனுஷின் இயக்கத்திலும் நடிப்பிலும் உருவாகி வரும் இட்லி கடை திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் தனுஷ், அருண் விஜய் தவிர நித்யா மேன, ராஜ்கிரண், சத்யராஜ், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிக்கின்றனர். உண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இப்படம் ஏப்ரல் 10இல் திரைக்கு வரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு அருண் விஜய், இட்லி கடை படம் குறித்த சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.
#ArunVijay At #NEEKAudiolaunch
– After watching the movie #Raayan, I wanted to act in a film directed by #Dhanush. There were many directors in the queue. I watched it before but I acted in #IdlyKadai directed by Dhanush Sir.#NEEK #Kubera
pic.twitter.com/Xh8T6Fvo0H— Movie Tamil (@MovieTamil4) February 11, 2025
அதன்படி அவர், இட்லி கடை படத்தின் பாடல் காட்சி ஒன்று தற்போது படமாக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார். மேலும், “ராயன் படம் பார்த்த பிறகு தனுஷ் இயக்கத்தில் நடிக்க விரும்பினேன். தனுஷ் ஒரு நல்ல மனிதர். நல்ல இயக்குனர். நிச்சயமாக இட்லி கடை திரைப்படம் வேறு மாதிரியான தரத்தை உருவாக்கும். ஜிவி பிரகாஷ் – தனுஷ் காம்பினேஷனில் வரும் எல்லா பாடல்களுமே நன்றாக இருக்கிறது. இட்லி கடை படமும் பெரிய அளவில் வெற்றி பெறும் என நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.