சுந்தர் .சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். இவரது நடிப்பில் சமீபத்தில் மதகஜராஜா திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தை இயக்குனர் சுந்தர். சி இயக்கியிருந்தார். அதற்கு முன்பாகவே சுந்தர். சி, விஷால் கூட்டணியில் ஆம்பள, ஆக்ஷன் ஆகிய படங்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் மதகஜராஜா படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் நடிகர் விஷால், சுந்தர்.சி இயக்கத்தில் நடிக்க போவதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்புகள் 2025 மார்ச் மாதத்திற்குள் தொடங்கும் என தகவல் கசிந்து வந்தது. இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால், நான்காவது முறையாக விஷால், சுந்தர். சி கூட்டணியில் உருவாக உள்ள புதிய படமானது ஆம்பள 2 படம் என்று சொல்லப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல் இப்படத்தில் நடிகை தமன்னா, நிதி அகர்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கப் போகிறார்கள் எனவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இருப்பினும் இது ஆம்பள படத்தில் இரண்டாம் பாகமா? அல்லது வேறொரு புதிய படமா? என்பது இனிவரும் நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.