Homeசெய்திகள்தமிழ்நாடுரயில்வே பணியாளரின் உயிரிழப்பு: பாதுகாப்பு குறைபாட்டை எதிர்த்து எஸ் ஆர் எம் யூ ஆர்ப்பாட்டம்!

ரயில்வே பணியாளரின் உயிரிழப்பு: பாதுகாப்பு குறைபாட்டை எதிர்த்து எஸ் ஆர் எம் யூ ஆர்ப்பாட்டம்!

-

- Advertisement -

ஆந்திர மாநிலம்  தடாவில் நேற்று காலை பணியில் இருந்த போது  ட்ராக் மெயிண்டனர் ஒருவர் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொரு டிராக் மெயிண்டனர் படுகாயம் அடைந்து சிகிச்சையில் உள்ளார் பாதுகாப்பு குறைபாட்டால் ரயில்வே ஊழியர் பலியான சம்பவம் குறித்து சென்னை கோட்டத்தில் எஸ் ஆர் எம் யூ 22 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ரயில்வே பணியாளரின் உயிரிழப்பு: பாதுகாப்பு குறைபாட்டை எதிர்த்து எஸ் ஆர் எம் யூ ஆர்ப்பாட்டம்!ஆந்திர மாநிலம்  தடாவில் நேற்று காலை பணியில் இருந்த போது  ட்ராக் மெயிண்டனர் ஒருவர் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொரு டிராக் மெயிண்டனர் படுகாயம் அடைந்து சிகிச்சையில் உள்ளார். பாதுகாப்பு விதி மீறலால் தான் இந்த விபத்து நடந்துள்ளது.

எனவே சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த, படுகாயம் அடைந்த ரயில்வே பணியாளர்களின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி எஸ் ஆர் எம் யூ ரயில்வே தொழிற்சங்கம் சார்பில் சென்னை கோட்டத்தில் 22 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை எழும்பூர், சென்ட்ரல், பேசின் பிரிட்ஜ், தாம்பரம், திண்டிவனம் அரக்கோணம் காட்பாடி ஆந்திர மாநிலம் புத்தூர் உள்ளிட்ட 22 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

2031-ஐ நோக்கி ஒரு அஜெண்டா நகருது… எச்சரிக்கும் ஜெகத் கஸ்பர்!

MUST READ