கர்நாடகாவில் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கர்நாடாக தேர்தல் குறித்து அறிவிப்பை வெளியிடுகிறார் தலைமைத் தேர்தல் ஆணையர். மே 24ம் தேதியுடன் கர்நாடக சட்டப்பேரவை பதவிக்காலம் முடிவடைகிறது.
கர்நாடகாவில் மே 24ம் தேதிக்குள் தேர்தலை முடிக்க வேண்டும் என்ற விதிமுறையால், ஒரே கட்டமாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மே மாதம் 10ம் தேதி தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், மே 13ம் தேதி அன்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
கர்நாடகாவில் 36 தனி தொகுதி 15 பழங்குடியினர் தொகுதி 173 பொதுத் தொகுதிகள் உள்ளன. கர்நாடகாவில் 224 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. கர்நாடகவில் மொத்தம் 5.21 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
அதில், 2.62 கோடி ஆண் வாக்காளர்கள், 2.59 பெண் வாக்காளர்கள் உள்ளனர். 4,699 மூன்றாம் பாலின வாக்காளர்கள் மற்றும் 9,17,241 பேர் முதல் தலைமுறை வாக்காளர்கள்.
மேலும், 80 வயதிற்கு மேற்பட்ட 16,976 பேரும் வீட்டில் இருந்து வாக்களிக்கும் வசதியும் அமைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் 1ம் தேதியன்று 18 வயதை பூர்த்தி அடைந்தவர்கள் அனைவரும் தேர்தலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியில் 124 வேட்பாளர்களின் பெயர்களை மார்ச் 25 அன்று அறிவித்தது. கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா வருணாவிலும், கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் கனகபுரா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
மேலும், தேர்தலில் போட்டியிடும் 80 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி மார்ச் 20ஆம் தேதி வெளியிட்டது. மாநிலத்தில் உள்ள 224 சட்டமன்ற தொகுதிகளிலும், மே மாதத்திற்குள் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வேட்பாளர்களை நிறுத்தப்போவதாக அக்கட்சி கூறியுள்ளது.
மேலும், ராகுலின் வயநாடு தொகுதிக்கு தற்போது இடைத்தேர்தல் இல்லை என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.