Homeசெய்திகள்சினிமா2வது வாரத்தில் நுழைந்த 'விடாமுயற்சி'.... முதல் 7 நாட்களின் முடிவில் வசூல் எவ்வளவு?

2வது வாரத்தில் நுழைந்த ‘விடாமுயற்சி’…. முதல் 7 நாட்களின் முடிவில் வசூல் எவ்வளவு?

-

- Advertisement -

விடாமுயற்சி படத்தின் வசூல் குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.2வது வாரத்தில் நுழைந்த 'விடாமுயற்சி'.... முதல் 7 நாட்களின் முடிவில் வசூல் எவ்வளவு?

அஜித்தின் 62 ஆவது படமாக உருவாகியிருந்த விடாமுயற்சி திரைப்படம் கடந்த (பிப்ரவரி 6) உலகம் முழுவதும் வெளியானது. லைக்கா நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்கியிருந்தார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். ஓம் பிரகாசி இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருந்தார். இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா மற்றும் பலர் நடித்திருந்தனர். நடிகர் அஜித் இந்த படத்தில் எந்தவித பில்டப்பும் இல்லாமல் நடித்திருக்கிறார். 2வது வாரத்தில் நுழைந்த 'விடாமுயற்சி'.... முதல் 7 நாட்களின் முடிவில் வசூல் எவ்வளவு?அதேசமயம் ஹாலிவுட் படத்தை தழுவி ஹாலிவுட் ரேஞ்சில் எடுக்கப்பட்டிருந்த இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதன்படி ஒரு தரப்பினர் இந்த படத்தை கொண்டாடி வரும் நிலையில் மற்றொரு தரப்பினர் இப்படம் குறித்து நெகட்டிவ்வான விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். இருப்பினும் இந்த படம் முதல் 7 நாட்களின் முடிவில் ரூ.150 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருக்கிறது என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. 2வது வாரத்தில் நுழைந்த 'விடாமுயற்சி'.... முதல் 7 நாட்களின் முடிவில் வசூல் எவ்வளவு?அதன்படி இன்றுடன் (பிப்ரவரி 13) இரண்டாவது வாரத்தில் நுழைந்துள்ள விடாமுயற்சி இனிவரும் நாட்களில் நல்ல வசூலை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ரூ. 200 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் அதிக லாபத்தை கொடுக்கவில்லை என்றாலும் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தாது என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

MUST READ