Homeசெய்திகள்க்ரைம்பணியிடத்திற்கே சென்று பெண் காவலர்களுக்கு பாலியல் தொல்லை: ஐபிஎஸ் அதிகாரி சஸ்பெண்ட்..!

பணியிடத்திற்கே சென்று பெண் காவலர்களுக்கு பாலியல் தொல்லை: ஐபிஎஸ் அதிகாரி சஸ்பெண்ட்..!

-

- Advertisement -

பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு என புகார்! போக்குவரத்து இணை ஆணையர் சஸ்பெண்ட். மேலும் ஒரு பெண் காவலருக்கு தொந்தரவு அளித்ததாகவும் குற்றச்சாட்டு!

பணியிடத்திற்கே சென்று பெண் காவலர்களுக்கு பாலியல் தொல்லை: ஐபிஎஸ் அதிகாரி சஸ்பெண்ட்..!சென்னை வடக்கு மண்டல போக்குவரத்து காவல் இணை ஆணையராக நேற்று வரை பணியாற்றி வந்தவர் மகேஷ் குமார். இதற்கு முன்பு சென்னை தெற்கு போக்குவரத்து காவல் இணை ஆணையராக பணியாற்றி வந்தார். அப்போது பெண் காவலர் ஒருவருக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

இது மட்டுமின்றி அந்த பெண் காவலரை தனது முகாம் அலுவலகத்திற்கு மாற்றி, தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்துள்ளார் என கூறப்படுகிறது. இது தொடர்பாக சில தினங்களுக்கு முன்பு அந்த பெண் காவலர் டிஜிபி சங்கர் ஜிவாலை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தார்.

அதன் பேரில் சிவில் சப்ளை சி.ஐ.டி. டிஜிபி சீமா அகர்வால் தலைமையில் விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டு, நடத்தப்பட்ட முதற் கட்ட விசாரணையில், பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து போக்குவரத்து காவல் இணை ஆணையர் மகேஷ் குமாரை பணியிடை நீக்கம் செய்து, டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். ஐபிஎஸ் அதிகாரி மகேஷ் குமார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், அவர் மீது வழக்குப் பதிவு செய்து சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இதேபோல் மற்றொரு பெண் காவலரும் ஐபிஎஸ் அதிகாரி மகேஷ் குமார் மீது புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

MUST READ