சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.
புகார் தொடர்பாக மருத்துவக் கல்லூரியின் ஆய்வக தொழில் நுட்புனர் வேலு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சேலம் இரும்பாலை சாலையில் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதில் இளங்கலை, முதுகலை மருத்துவம் மற்றும் செவிலியர் படிப்புகளில் தமிழக மட்டும் இன்றி மற்ற மாநில மாணவ மாணவிகளும் சேர்ந்து படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் உயிர் வேதியல் துறையில் ஆய்வக தொழில்நுட்பராக பணிபுரியும் ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதக புகார் எழுந்தது.
இது தொடர்பாக கல்லூரியின் முதல்வர் தேவிமீனாளுவக்கு புகார் அளிக்கப்பட்டது.
தொடர்ந்து கல்லூரி விசாகா கமிட்டி தலைவர் மருத்துவர் சுபா தலைமையில் கடந்த 31ஆம் தேதி மாணவிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த ஆய்வக தொழில்நுட்புனர் வேலு- விடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இச்சம்பவம் மருத்துவ கல்லூரி வளாகத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.