HomeBreaking News'இதயம் முரளி'யாக அதர்வா.... ஆகாஷ் பாஸ்கரன் இயக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

‘இதயம் முரளி’யாக அதர்வா…. ஆகாஷ் பாஸ்கரன் இயக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

-

- Advertisement -

ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் இதயம் முரளி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.'இதயம் முரளி'யாக அதர்வா.... ஆகாஷ் பாஸ்கரன் இயக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

தனுஷின் இட்லி கடை, சிவகார்த்திகேயனின் பராசக்தி, சிம்புவின் STR 49 ஆகிய பெரிய ஹீரோக்களின் படங்களை தயாரித்து பிசியான தயாரிப்பு நிறுவனமாக இருப்பது டான் பிக்சர்ஸ் நிறுவனம். இந்த நிறுவனத்தின் உரிமையாளர் ஆகாஷ் பாஸ்கரன் தற்போது புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இந்த படத்தில் அதர்வா ஹீரோவாக நடிக்கிறார். இதில் அதர்வாவுடன் இணைந்து ப்ரீத்தி முகுந்தன், கயடு லோகர், நட்டி நட்ராஜ், ரக்ஷன், தமன், நிஹாரிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மனோஜ் பரமஹம்சா இப்படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

அதன்படி இந்த படத்திற்கு இதயம் முரளி என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. மேலும் இது தொடர்பான அறிவிப்பு வீடியோவும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் அதர்வாவின் அப்பாவான முரளிக்கு ‘இதயம்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதைப்போல் அதர்வாவிற்கும் ‘இதயம் முரளி’ திரைப்படம் வெற்றிப் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இனிவரும் நாட்களில் இப்படம் தொடர்பான மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என நம்பப்படுகிறது.

MUST READ