Homeசெய்திகள்அரசியல்'நான் என்ன ஓ.பி.எஸ் இல்லடா..! செங்கோட்டையனின் மிரட்டல்… அடிபணிந்த எடப்பாடி பழனிசாமி..!

‘நான் என்ன ஓ.பி.எஸ் இல்லடா..! செங்கோட்டையனின் மிரட்டல்… அடிபணிந்த எடப்பாடி பழனிசாமி..!

-

- Advertisement -

அத்திக்கடவு-அவிநாசி திட்ட கூட்டமைப்பு சார்பில், எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான பழனிசாமிக்கு அன்னூரில் கடந்த 9-ஆம் தேதி பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் அமைச்சரும், கோபிசெட்டிபாளைம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வுமான செங்கோட்டையன் பங்கேற்காமல் புறக்கணித்தார்.

“இந்த விழா தொடர்பான அழைப்பிதழ்கள் மற்றும் மேடையில், முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இடம்பெறாத நிலையில், எனது உணர்வை வெளிப்படுத்தும் வகையில் விழாவில் பங்கேற்கவில்லை” என்று செங்கோட்டையன் விளக்கம் அளித்தார்.

என்னைப் பொறுத்தவரை நேர்மையான பாதையில் அரசியல் செய்பவன் என்பதை யாராலும் மறுக்க முடியாது. எத்தனையோ வாய்ப்புகள் வந்தபோதும் அதுபற்றி கவலைப்படாமல் இந்த இயக்கம் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்தவன் நான். அதை மறந்து விடக் கூடாது. என்னை சோதிக்காதீர்கள். இதை நான் வேண்டுகோளாக வைக்கிறேன். அதிமுக இயக்கம் தொண்டர்கள் நிறைந்த இயக்கம். ஒற்றுமையோடு பணியாற்றக் கூடிய இயக்கம். விட்டுக் கொடுக்கும் இயக்கம் என்பதையும் மறந்து விட வேண்டாம். ஏதாவது கிடைத்துவிடாதா என்று எதையாவதைப் பரப்பி என்னையும், எதிர்க்கட்சியையும் தூங்க விடாமல் செய்து வருகின்றனர்” எனப் பேசி இருந்தார்.

இந்நிலையில் அவரை சமாதானப்படுத்தும் நோக்கில் அந்தியூர் பொதுக்கூட்டத்திலும் எடப்பாடி பழனிச்சாமி, செங்கோட்டையன் புகைப்படங்கள் ஒரே அளவு அச்சிடப்பட்டு பொதுக்கூட்ட மேடையில் பேனர் வைக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள அத்தாணியில் சுமார் 7 மணி அளவில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கென‌ அமைக்கப்பட்ட மேடையில் எடப்பாடி பழனிச்சாமி, செங்கோட்டையன் புகைப்படங்கள் ஒரே அளவு அச்சிடப்பட்டு பேனர் வைக்கப்பட்டுள்ளது.

நேற்று கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி, செங்கோட்டையனின் புகைப்படங்கள் ஒரே அளவு அச்சிடப்பட்டு பொதுக்கூட்ட மேடையில் வைக்கப்பட்டிருந்தது.

MUST READ