சந்தானம் நடிக்கும் டிடி நெக்ல்ஸ் லெவல் படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
நடிகர் சந்தானம் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்தவர். தற்போது இவர், தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் மதகஜராஜா வெற்றிக்கு பிறகு மீண்டும் காமெடியனாக நடிக்கப் போகிறார் என பல தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதற்கிடையில் இவர், டிடி நெக்ஸ்ட் லெவல் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ஏற்கனவே சந்தானம் நடிப்பில் வெளியான தில்லுக்கு துட்டு 1, 2 மற்றும் டிடி ரிட்டன்ஸ் ஆகிய படங்களைப் போல் இந்த படமும் காமெடி கலந்த ஹாரர் கதைக்களத்தில் உருவாகி வருகிறது. அதன்படி ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து படமானது 2025 மே மாதம் திரைக்கு வர தயாராகி வருகிறது. இந்நிலையில் நடிகர் சந்தானம், டிடி நெக்லஸ் லெவல் படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கி இருக்கிறார்.
இது தொடர்பாக படக்குழு ப்ரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. மேலும் இந்த படத்தில் சந்தானத்துடன் இணைந்து மொட்ட ராஜேந்திரன், கௌதம் மேனன், செல்வராகவன், கஸ்தூரி, யாஷிகா ஆனந்த் மற்றும் பலர் நடித்துள்ளனர். நடிகர் ஆர்யா படத்தை தயாரிக்க பிரேம் ஆனந்த் இந்த படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.