ஜனநாயகன் படப்பிடிப்பு குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி உள்ளது.
விஜயின் 69ஆவது திரைப்படமாக உருவாகி வரும் திரைப்படம் தான் ஜனநாயகன். இந்த படத்தில் விஜயுடன் இணைந்து பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ்ராஜ், மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், நரேன், பிரியாமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க ஹெச். வினோத் இதனை இயக்குகிறார். அனிருத் இதற்கு இசையமைக்கிறார். சத்யன் சூர்யன் இப்படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படமானது அரசியல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகி வருகிறது. நடிகர் விஜயின் கடைசி படம் என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதே சமயம் சமீபத்தில் இந்த படத்தில் இருந்து அடுத்த அடுத்த போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. இதற்கிடையில் இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், ஸ்ருதிஹாசன் போன்ற பிரபலங்கள் இணைந்து இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி விஜய் மற்றும் பாபி தியோல் ஆகிய இருவருக்கமான சண்டைக்காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் ஜனநாயகன் படத்தின் ஒட்டுமொத்தபடப்பிடிப்பையும் 2025 ஏப்ரல் மாதத்திற்குள் முடிக்க படக்குழு திட்டமிட்டு வருவதாக தெரியவந்துள்ளது. அடுத்தது இந்த படம் 2025 அக்டோபரில் வெளியாகாது என்றும் 2025 பொங்கலுக்கு தான் வெளியாகும் என்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.