Homeசெய்திகள்சினிமாசமந்தா - நாக சைதன்யா குறித்த அவதூறு வழக்கு..... கொண்டா சுரேகா நீதிமன்றத்தில் ஆஜர்!

சமந்தா – நாக சைதன்யா குறித்த அவதூறு வழக்கு….. கொண்டா சுரேகா நீதிமன்றத்தில் ஆஜர்!

-

- Advertisement -

சமந்தா – நாக சைதன்யா குறித்து அவதூறாக பேசிய வழக்கில் தெலங்கானா அமைச்சர் கொண்டா சுரேகா நீதிமன்றத்தில் ஆஜரானார்.சமந்தா - நாக சைதன்யா குறித்த அவதூறு வழக்கு..... கொண்டா சுரேகா நீதிமன்றத்தில் ஆஜர்!

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நாக சைதன்யா. இவரது நடிப்பில் சமீபத்தில் தண்டேல் எனும் திரைப்படம் வெளியாகி வெற்றி நடைபோட்டு வருகிறது. இதற்கிடையில் நடிகர் நாக சைதன்யா கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகை சமந்தாவின் காதலித்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இருப்பினும் சில வருடங்களிலேயே இவர்களது திருமண வாழ்க்கையில் விரிசல் ஏற்பட இருவரும் விவாகரத்து பெற்றுக் கொண்டு பிரிந்து சென்றனர். இதன் பின்னர் நாக சைதன்யா – நடிகை சோபிதா துலிபாலாவை திருமணம் செய்து கொண்டார். இதற்கிடையில் தான் தெலங்கானா அமைச்சர் கொண்டா சுரேகா, கே.டி. ராமராவ் – நாக சைதன்யா – சமந்தா ஆகியோரை தொடர்புபடுத்தி அவதூறாக பேசி இருந்தார்.சமந்தா - நாக சைதன்யா குறித்த அவதூறு வழக்கு..... கொண்டா சுரேகா நீதிமன்றத்தில் ஆஜர்! இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்த திரைப்பிரபலங்கள் பலரும் கொண்டா சுரேகாவிற்கு எதிராக கண்டனம் தெரிவித்து வந்தனர். அதன் பின்னர் அமைச்சர் கொண்டா சுரேகா மன்னிப்பு கூறினார். இருப்பினும் நாக சைதன்யாவின் தந்தையும் பிரபல நடிகருமான நாகார்ஜுனா, தன் குடும்பத்தை பற்றி அவதூறு பரப்பியதற்காக கொண்டா சுரேகாவின் மீது வழக்கு தொடர்ந்திருந்தார். இது தொடர்பான வழக்கில் கொண்டா சுரேகா நாம்பள்ளி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார்.

MUST READ