வா வாத்தியார் படத்தில் இருந்து முதல் பாடல் வெளியாகி உள்ளது.
கார்த்தி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் வா வாத்தியார். இந்த படத்தை சூது கவ்வும் படத்தின் இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கியுள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா இந்த படத்தை தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இதற்கு இசை அமைத்துள்ளார். இந்த படத்தில் நடிகர் கார்த்தி, எம்ஜிஆரின் தீவிர ரசிகனாக நடித்திருக்கும் நிலையில் அவருக்கு ஜோடியாக கிரித்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து சத்யராஜ், ராஜ்கிரண் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து படத்திலிருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும் டீசரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தை 2025 ஏப்ரல் மாதத்தில் திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இன்று (பிப்ரவரி 14) காதலர் தினத்தை முன்னிட்டு இந்த படத்தில் இருந்து உயிர் பத்திக்காம எனும் முதல் பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலானது கார்த்தி மற்றும் கிரித்தி ஷெட்டி ஆகிய இருவருக்கமான காதல் பாடலாக வெளியாகி உள்ளது. அடுத்தது இந்த பாடல் வரிகளை விவேகா எழுதியுள்ளார். விஜய் நரேன், ஆதித்யா ரவிச்சந்திரன், சந்தோஷ் நாராயணன் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது.