Homeசெய்திகள்கட்டுரைஅம்பேத்கரை விழுங்கிய ஆர்.எஸ்.எஸ்!  திமுக அணி கொள்கை கூட்டணி! உடைத்து பேசும் பத்திரிகையாளர் விஜயசங்கர்!

அம்பேத்கரை விழுங்கிய ஆர்.எஸ்.எஸ்!  திமுக அணி கொள்கை கூட்டணி! உடைத்து பேசும் பத்திரிகையாளர் விஜயசங்கர்!

-

- Advertisement -

தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி கொள்கை ரீதியாக பாஜகவை எதிர்ப்பவர்கள் என்றும், அந்த கூட்டணியை உடைக்கும் வலிமை அண்ணாமலையிடம் இல்லை என்றும்  மூத்த பத்திரிகையாளர் விஜயசங்கர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் அரசமைப்பு சட்டத்தை சிதைக்கும் பாஜகவின் செயல்பாடுகளை விமர்சித்து பிரபல யூடியூப் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் விஜயசங்கர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் 2 முறை பொய் சொன்னார்கள். முதலாவது எங்களை இந்தி படிக்கவிட வில்லை என்று சொன்னார். மீண்டும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நீங்கள் தான் எங்களை இந்தி படிக்க விடவில்லையே என்று சென்னார். அவர் படித்த சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியில் இந்தி வகுப்புகள் நடத்தப்பட்டன. அந்த காலத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்று திமுக ஆட்சிக்கு வந்த பின்னரும் கூட தமிழ்நாட்டில் இந்தி படங்கள், இந்தி பாடல்கள் மிகவும் பிரபலமாக இருந்தன. பெரியாரையோ, திராவிட இயக்கத்தையோ, இந்தி எதிர்ப்பு, பிராமண எதிர்ப்பு, கடவுள் மறுப்பாளர்கள் என்று சுறுக்குவது தவறு. பெரியார் சமூகநீதிக்கான அடித்தளத்தை ஏற்படுத்தியவர். பெரியார் கடவுள் மறுப்பை இறுதியாகத்தான் கையில் எடுத்தார். பெரியார் நீண்டகால பொதுவாழ்வுக்கு சொந்தக்காரர் ஆவார். அவரை பிராமணர்களுக்கு எதிரி, தமிழுக்கு எதிரி என்று குறுக்கி சொல்வது வரலாற்றுக்கு புறம்பானது.

வருமான வரியை குறைக்க மத்திய அரசு முடிவு?

தமிழக வரலாற்றில் 1916ல் வெளியான பிராமணர் அல்லாதோர் அறிக்கை என்பது மிக முக்கியமானது. அதில்தான் 97 சதவீதம் உள்ள எங்களுக்கு அரசு பதவிகள் இல்லை. நீங்கள் 3 சதவீதம் இருந்துகொண்டு கலெகடர், பெரிய பெரிய அதிகாரிகள் என அனைத்து மட்டத்திலும் உள்ளார்கள் என பிராமணர் அல்லாதோர் குற்றம்சாட்டினர். அப்போது, காங்கிரஸ் கட்சியில் இருந்த பெரியார், இடஒதுக்கீடு தொடர்பான விவகாரத்தால் காந்தியிடம் கோபித்துக் கொண்டு கட்சியில் இருந்து வெளியேறினார். அதற்கு காரணம் பெரியார் சமூகநீதியை வலியுறுத்தினார். ஆனால் காந்தி வருணாசிரம தர்மத்தை ஆதரித்தார். சிங்காரவேலர் உடனான தொடர்பால் கம்யூனிசத்தையும் பெரியார் ஆதரித்தார். நாட்டில் உள்ள பிராமணியம் மட்டும் அல்ல முதலாளித்துவமும் ஒழிய வேண்டும் என்றார். இன்றும் அது பொருந்தி வருகிறது.

1925ல் பெரியார் சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார். அதே வருடம் ஆர்.எஸ்.எஸ் இயக்கமும் தொடங்கப்பட்டது. 100 வருடங்களில் சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கமாக வளர்ச்சி அடைந்து தமிழ்நாட்டில் ஆட்சியை பிடித்து விட்டார்கள். அது பெரியாரின் கொள்கைக்கு கிடைத்த வெற்றிதானே. பெண்ணுரிமை, சமூக நீதி எல்லாவற்றுக்கும் கிடைத்த வெற்றி தானே. திராவிட இயக்க பாரம்பரியம் ஒரு நூறு வருடமாக இன்று வரை உள்ளது. திமுக, அதிமுக, விசிக என இன்றைக்கு திராவிட அரசியல் பேசும் கட்சிகளுக்கு 75 சதவீதம் வாக்குகள் உள்ளன. ஆர்.எஸ்.எஸ். என்ற கலாச்சார இயக்க பாரம்பரியத்தில் வந்த பாஜக இன்று மத்தியில் ஆட்சியில் உள்ளது. பாஜகவுக்கு சவாலாக இருப்பது தமிழ்நாடு, கேரளா தான். பெரியார் சொல்வது போன்று, ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு நெஞ்சில் தைத்த முள்ளாக இருப்பது திராவிட இயக்கம்தான். அவர்களால் இந்த இயக்கத்தையும், மக்களையும் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஸ்ரீரங்கத்திற்கு சென்றால் கோயில் கோபுரத்துக்கு முன்பாக பெரியார் சிலை உள்ளது. ஆனால் அந்த கோவிலுக்கு செல்பவர்கள் யாரும் சிலையை ஒன்றும் செய்வதில்லை. ஏனென்றால் அவர் மீது பெரிய மரியாதை உள்ளது.

நடிகர்கள் நன்றாக நடிக்கிறார்கள் என்பது வேறு. அவர் உடனே அரசியல் கட்சி தொடங்கினால் நாம் அவர்களை ஆதரிப்போம் என்பது இல்லை. விஜயகாந்தால் கூட முடியவில்லை. அரசியலில் வெற்றி பெற்ற ஒரே நடிகர் எம்.ஜி.ஆர். மட்டும்தான். ஆர்.எஸ்.எஸ். என்ற மதவாத அமைப்பின் நோக்கம் இந்து ராஜியத்தை ஏற்படுத்துவதுதான். இன்றைக்கு வருணா சிரம ராஜ்யத்தை ஏற்படுத்தக்கூடிய நபர்கள் ஆட்சியில் இருக்கிறார்கள். அவர்களுக்கு  சவாலாக இருக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடு. அதை உடைப்பதற்கான தத்துவார்த்த போராட்டத்தை நடத்துவதற்கு அண்ணாமலை தகுதி இல்லாத நபர். அது அண்ணாமலையால் முடியாது.

பெரியார் சர்ச்சை எழுந்தபோது பெரியார் விவகாரம் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்கிறார்கள். இது எவ்வளவு பெரிய முட்டாள்த்தனமானது. இன்று பாஜகவுக்கு வருவது கோல்வால்கர், சாவர்கருக்கு வரும் வாக்குகளா? அது பல வடிவம் பெற்று, அரசியல் வடிவம் பெற்றுவிட்டது. அது பெரியாருக்கான வாக்கு அல்ல. பெரியாரின் கொள்கையின் அடிப்படையில் வந்த திமுக என்ற இயக்கத்திற்கான வாக்கு. அதை ஏன் உங்களால் உடைக்கமுடியவில்லை. பெரியார் மறைந்து 50 ஆண்டு காலம் ஆகியும் இன்றும் ஏன் அவரை பார்த்து பயப்படுகிறீர்கள். இன்று பாஜக அம்பேதர் இந்துத்துவா பேசினார் என்று சொல்கிறது. அது மிகப்பெரிய அயோக்கித்தனமாகும். ஆனால் இந்துத்துவா பெரியாரையோ, இந்துத்துவா மார்க்சையோ உங்களால் சொல்ல முடியாது.

aNNamalai mk stalin

பெரியார் கொள்கையின் தொடர்ச்சி இங்கே உள்ளது. அதுதான் சுயமரியாதை திருமணம் சட்டம் வருகிறது. தமிழ்நாடு என்று பெயர் வருகிறது. பெரியார் அந்த காலத்தில் சொல்கிறார். நீ சாதி, மதம் என்று சொல்லுகிறாய். அங்கே பார் ஆகாய விமானம் விடுகிறார்கள். எவ்வளவோ முன்னேறிவிட்டார்கள். அப்போது நீ ஏன் முன்னேறவில்லை என்று கேள்வி எழுப்பினார். தமிழ் மொழியில் ஏன் புராணத்தை பேசி கொண்டிருக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார். இன்று நாட்டில் மிகவும் நகர மயமான மாநிலம் தமிழ்நாடு தான். அனைத்து துறைகளிலும் தமிழகம் முன்னேறியதற்கு அதற்கு அடித்தளமிட்டவர் தந்தை பெரியார்தான்.

இன்று திமுக முன்னின்று கட்டிய அணி உறுதியாக இருக்கிறது அல்லவா அது ஏன்? இந்த அணியில் உள்ளவர்கள் எல்லாம் கொள்கை ரீதியாக பாஜகவை எதிர்ப்பவர்கள். அந்த கூட்டணியை உடைக்கும் வலிமை அண்ணாமலையிடம் இல்லை. அவருக்கு கொள்கை தெளிவும் இல்லை. அவர் இன்று வரை பல விஷயங்களுக்கு ஆதாரம் தராமல் இருக்கிறார். சீமானும் அப்படித்தான் இருக்கிறார், விஜயும் அப்படித்தான் இருக்கிறார், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ