Homeசெய்திகள்அரசியல்அதிமுகவில் எடப்பாடியாருக்கு துரோகம்… அதிர வைக்கும் ஆடியோ லீக்..!

அதிமுகவில் எடப்பாடியாருக்கு துரோகம்… அதிர வைக்கும் ஆடியோ லீக்..!

-

- Advertisement -

திமுகவில் மாவட்டச் செயலாளர்கள் மாற்றம் தொகுதி பொறுப்பாளர்கள் நீக்கம் என தற்போது ‘களையெடுப்பு’ தந்து வருகிறது. ஆனால், உட்கட்சி பூசல் கோஷ்டிகள், கட்சியே உடைந்து கிடப்பதால் அதிமுகவில், எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்காமல் தடுமாறி வருகிறார். இந்த நிலையில்தான் திருச்சியில் ஒரு அதிமுக நிவாகியே எடப்பாடி பழனிசாமியை ‘பொதுச் செயலாளரா? ம…ரு செயலாளரா? எனக் கேட்டு திமுக அமைச்சர் கே.என்.நேருவுக்கு ஆதரவாக பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மயிலாடுதுறை இளைஞர்கள் படுகொலை: கடும் நடவடிக்கை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

அந்த ஆடியோவில் ‘அண்ணே செல்வ தியாகராஜன் பேசுறேன்னே…’

எதிர்தரப்பில்,

‘சொல்றா தம்பி… சொல்றா…’

‘சித்தப்பாவ கூப்பிட்டிங்கன்னு சொல்லி சொல்றார்ன்னா..?’

‘என்னடா தம்பி என் மாமன் (கே.என்.நேரு) உனக்கு என்னாடா துரோகம் பண்ணுனாரு… அவர கேள்வி கேக்குறியாமே? புடிக்கலேன்னா… மாமன் உனக்கு எவ்வளவு நல்லது பண்ணியிருக்கிறாரு?

‘இல்லன்னே… குடுத்பத்துல…!’’

‘‘டேய் தம்பி சொல்றத கேளுடா… நீ பொறக்கறதுக்கு முன்னாடியே உன் குடும்பத்துக்கு என் குடும்பம் உதவி செய்திருக்கிறது… சரியா..?’’

‘‘கேட்குது«ன்னே… பொதுச்செயலார்…!’’

‘‘நான் சொல்றத கேளுடா… பொதுச் செயலாளராவது ம..ரு செயலாளராவது… அதையெல்லாம் கட்சிக்காரங்க பாத்துக்குவாங்க… உனக்கும் நேருவுக்கும் என்னடா பிரச்னை… நீ… அவ்வளவு பெரிய அரசியல்வாதியான்னு கேக்குறேன்..?-

உங்கக் குடும்பத்துக்கு எங்கக் குடும்பம் உதவி பண்ணியிருக்கு… எங்க அண்ணே… மாமே எல்லாம் பண்ணியிருக்கோம்… நீ எல்லாம் பொறந்தியோ… பொறக்கலையே… உங்கப்பன் கிட்ட கேளு…. குணசேகரன் தம்பு… ரவிச்சந்திரன் தம்பு… எப்படின்னு கேளுடா..?

அதைவிட்டுட்டு இன்னைக்கு நீ நேருவை யாருன்னு கேட்டு போடுறின்னா… என்னடா அர்த்தம்…-’’ என்றார்.

‘‘அண்ணே பொதுச் செயலாளரை (எடப்பாடி பழனிசாமி) பேசவும்தான்னே போட்டேன்..!’’

‘‘என்டா பொதுச்செயலாளர பேசுறததான் இந்தத் தொகுதியில கேட்கறதுக்கு ஆளு இல்லையான்னே? நீ மட்டும்தான் ஆளான்னே..? ஏன்… இளங்கோவன் போடலாம்ல… சிவபதி போடலாம்ல… செல்வராஜ் போடலாம்ல… அவுங்குளுக்கு இல்லாத அக்கறை உனக்கு எதுக்குடா?- பொதுச் செயலாளர பேசிட்டாரு. சரி… அவருக்கு எல்லாமே இளங்கோவன்தானே… அவரு கேட்டுட்டுப் போறாரு? ஏன், பரஞ்சோதி, பூனாட்சி, வளர்மதி… இவங்கெல்லாம் கேட்டுட்டுப் போறாங்க’’ என அந்த ஆடியோ முடிகிறது.

அதாவது, அ.தி.மு.க. நிர்வாகி செல்வ தியாகராஜன், அக்கட்சியைச் சேர்ந்த நிர்வாகியிடம் பேசிய ஆடியோதான் இது..!

அதிமுக-வில் இருந்துகொண்டே, அக்கட்சிக்கு துரோகம் செய்பவர்கள் மீது எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கிறார்கள் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள். இளங்கோவனைப் பற்றியே பேசிய பிறகும் சேலம் இளங்கோவன் முசிறியில் மவுனமாக இருப்பதைப் பார்த்துதான் அதிமுக-வின் ரத்தத்தின் ரத்தங்கள் கொந்தளித்துப் போய் இருக்கிறார்கள்.

MUST READ