Homeசெய்திகள்தமிழ்நாடுஏப்ரல் 8-ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி..

ஏப்ரல் 8-ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி..

-

ஏப்ரல் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வருகை தர இருக்கிறார்.

சென்னை விமானநிலையத்தில் ரூ. 2,400 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த விமான முனையங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதில் முதல் கட்ட பணிகள் நிறைவடைந்துள்ளதால் புதிய கட்டிடம் திறப்பு விழா ஏப்ரல் 8ம் தேதி நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். அத்துடன் சென்னை-கோவை வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கிறார்.

Chennai Airport - PM Modi

மீனம்பாக்கம் ஏ.எம். ஜெயின் கல்லூரி மைதானத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் விமான நிலைய ஒருங்கிணைந்த முனையத்தையும், சென்னை-கோவை இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவையையும் தொடங்கி வைக்கிறார். இதற்காக ஜெயின் கல்லூரியில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த புதிய முனையம் மூலம் பயணிகளின் எண்ணிக்கை 2.2 கோடியிலிருந்து, 3.5 கோடியாக அதிகரிக்கும். முழுவதும் சர்வதேச தரத்தில் கட்டப்பட்டு உள்ளதால், ஒருங்கினைந்த விமான நிலைய முனையத்தின் அனைத்து இடங்களும் வண்ண விளக்குகளால் ஜொலிக்கின்றன.

வந்தே பாரத் ரயில்

இதற்காக சென்னைக்கு வந்து ஏப்ரல் 8-ந்தேதி இரு திட்டங்களையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி, அன்று இரவு கிண்டி ஆளுநர் மாளிகையில் தங்குவார் என தெரிகிறது. அப்போது கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் தமிழக பா.ஜனதா நிர்வாகிகளை சந்தித்து பேச முடிவு செய்து உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரமரின் வருகையொட்டி, விமான நிலையம் முதல் விழா மைதானம் வரை பிரதமர் செல்லும் வழி நெடுகிலும் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க பாஜக திட்டமிட்டுள்ளது.

MUST READ