Homeசெய்திகள்சினிமாமீண்டும் கதாநாயகனாக களமிறங்கும் நகைச்சுவை நடிகர் செந்தில்!

மீண்டும் கதாநாயகனாக களமிறங்கும் நகைச்சுவை நடிகர் செந்தில்!

-

- Advertisement -

நகைச்சுவை நடிகர் செந்தில் மீண்டும் கதாநாயகனாக நடிக்கிறார் என புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.மீண்டும் கதாநாயகனாக களமிறங்கும் நகைச்சுவை நடிகர் செந்தில்!

தமிழ் சினிமாவில் 80 காலகட்டத்தில் இருந்து தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகர் செந்தில். அதிலும் கவுண்டமணியுடன் இணைந்து இவர் அடிக்கும் லூட்டி ஏராளமான ரசிகர்களை சென்றடைந்தது. அந்த வகையில் கவுண்டமணி- செந்தில் காம்பினேஷனில் வெளியான பல காமெடிகளை 2கே கிட்ஸ்களும் ரசித்து வருகிறார்கள். இருப்பினும் 2000 ஆம் ஆண்டிற்கு பிறகு கவுண்டமணிக்கு சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கியது போல செந்திலுக்கும் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. இருப்பினும் ஓரிரு படங்களில் செந்தில் தலை காட்டிவிட்டு செல்கிறார். அந்த வகையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான லால் சலாம் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அடுத்தது சமீபத்தில் வெளியான குழந்தைகள் முன்னேற்றக் கழகம் எனும் திரைப்படத்திலும் நடித்திருந்தார். இதற்கிடையில் அவர் ஹீரோவாக நடித்துள்ள புதிய படம் ஒன்று நீண்ட நாட்களாக ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது. மீண்டும் கதாநாயகனாக களமிறங்கும் நகைச்சுவை நடிகர் செந்தில்!இந்நிலையில் மீண்டும் ஒரு புதிய படத்தில் கதாநாயகனாக களம் இறங்கியுள்ளார் செந்தில். இந்த படத்தில் செந்திலுடன் இணைந்து கூல் சுரேஷ், பொன்னம்பலம், ரவி மரியா, சென்ட்ராயன் உள்ளிட்ட பலரும் நடிப்பதாக தகவல் வெளியாகி வருகின்றன. அத்துடன் இப்படத்தில் செந்தில் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் எனவும் சொல்லப்படுகிறது. மேலும் இப்படத்தை சாய் பிரபா மீனா இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இனிவரும் நாட்களில் படம் தொடர்பான மற்ற அப்டேட்டுகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ