HomeBreaking Newsபரபரப்பான திரைக்கதையில் 'சுழல் 2'..... ட்ரைலர் எப்படி இருக்கு?

பரபரப்பான திரைக்கதையில் ‘சுழல் 2’….. ட்ரைலர் எப்படி இருக்கு?

-

- Advertisement -

சுழல் 2 வெப் தொடரின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.பரபரப்பான திரைக்கதையில் 'சுழல் 2'..... ட்ரைலர் எப்படி இருக்கு?

கடந்த 2022 ஆம் ஆண்டு புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் சுழல் என்ற வெப் சீரிஸ் வெளியானது. இதில் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ஸ்ரியா ரெட்டி, நிவேதிதா சதீஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். விறுவிறுப்பான த்ரில்லர் ஜானரில் வெளியான இந்த வெப் சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து தற்போது புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் சுழல் 2 என்ற வெப் சீரிஸ் உருவாகி இருக்கிறது. இதில் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் இணைந்து லால், சரவணன், மஞ்சிமா மோகன், கௌரி கிஷன் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். சாம் சி.எஸ். இதற்கு இசை அமைத்துள்ள நிலையில் ஆபிரகாம் ஜோசப் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். சூழல் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக உருவாகியிருக்கும் இந்த சீசன் சுழல் 2 – The Vortex Season 2 என்ற தலைப்பில் வருகின்ற பிப்ரவரி 28ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் இதன் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த ட்ரெய்லரை பார்க்கும்போது இது பழிவாங்கும் கதை போல் தெரிகிறது. அதே சமயம் முதல் பாகத்தை போல் இந்த பாகமும் விறுவிறுப்பான திரைக்கதையில் ரசிகர்களை வெகுவாக கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் தற்போது இந்த ட்ரெய்லரும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ