Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்தயிரை உடலுக்கு வெளியில் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்!

தயிரை உடலுக்கு வெளியில் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்!

-

- Advertisement -

தயிரை உடலுக்கு வெளியில் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்தயிரை உடலுக்கு வெளியில் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்!

பொதுவாக தயிர் சாப்பிடுவதனால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். அதன்படி தயிர் செரிமானத்தை மேம்படுத்தும். மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்க வழிவகை செய்யும். அத்துடன் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தயிர் மிகவும் உதவிகிறது. மேலும் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை கட்டுப்படுத்தி இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. அடுத்தது தயிரில் கால்சியம் சத்துக்கள் இருப்பதனால் இது எலும்பு மற்றும் பற்களுக்கு நல்லது. இவ்வாறு தயிரை உட்கொள்வதன் மூலம் ஏராளமான நன்மைகள் கிடைப்பது மட்டுமில்லாமல் தயிரை உடலுக்கு வெளியில் பயன்படுத்துவதாலும் ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது.தயிரை உடலுக்கு வெளியில் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்!

அதாவது தயிருடன் சிறிதளவு மஞ்சள், சந்தனம், வெந்தயத்தூள் ஆகியவற்றை கலந்து முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவி வர முகத்தில் உள்ள கருமை நீங்கி சருமம் பளபளப்பாக மாறும்.

பின்னர் தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்து வர பொடுகு தொல்லை நீங்கும்.தயிரை உடலுக்கு வெளியில் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்! அதே சமயம் தயிர் மற்றும் வெந்தயத்தை அரைத்து தலையில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து கழுவி வந்தால் முடி வளர்ச்சி அதிகமாகும். எனவே தயிர் முடியின் ஆரோக்கியத்திற்கும் பல நன்மைகளை தருகின்றன.

இருப்பினும் இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் மருத்துவரை அணுகுவது மிகவும் நல்லது.

MUST READ