Homeசெய்திகள்சினிமா'அமரன்' படத்திற்காக கடினமாக உழைத்த சிவகார்த்திகேயன்.... இணையத்தில் வைரலாகும் வீடியோ!

‘அமரன்’ படத்திற்காக கடினமாக உழைத்த சிவகார்த்திகேயன்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

-

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன், அமரன் படத்திற்காக தனது உடல் அமைப்பை மாற்றியது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.'அமரன்' படத்திற்காக கடினமாக உழைத்த சிவகார்த்திகேயன்.... இணையத்தில் வைரலாகும் வீடியோ!

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக மாறியுள்ளார். அந்த வகையில் தன்னுடைய அடுத்தடுத்த படங்களை மிக கவனமாக தேர்ந்தெடுத்து வருகிறார் சிவகார்த்திகேயன். எனவே ரசிகர்கள் மத்தியிலும் சிவகார்த்திகேயனுடைய அடுத்தடுத்த படங்களின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது.'அமரன்' படத்திற்காக கடினமாக உழைத்த சிவகார்த்திகேயன்.... இணையத்தில் வைரலாகும் வீடியோ! அதிலும் தற்போது உருவாகி இருக்கும் மதராஸி, பராசக்தி ஆகிய படங்களில் சிவகார்த்திகேயனின் தோற்றங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்கிடையில் இவர், அமரன் திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவின் அடுத்த கட்டத்திற்கு முன்னேறி உள்ளார். இந்த படம் சிவகார்த்திகேயனின் கேரியரில் மிக முக்கியமான படமாக அமைந்திருக்கிறது. அதாவது இந்த படத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயன் மிகவும் கடினமாக ஒர்க்அவுட் செய்து தன்னுடைய உடல் அமைப்பை மாற்றி இருக்கிறார். அவருடைய அத்தனை கஷ்டங்களுக்கும் கிடைத்த பலன் தான் அமரன் படத்தின் இமாலய வெற்றி என்று சொல்லலாம்.

தற்போது சிவகார்த்திகேயன், அமரன் படத்திற்காக தன்னுடைய உடல் அமைப்பை மாற்றியது தொடர்பான வீடியோ இணையத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. மேலும் சிவகார்த்திகேயன் பல வலிகளை தாண்டி அவர் தனது உடல் அமைப்பை மாற்றியது குறித்து அமரன் படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியும், சிவகார்த்திகேயனின் ஜிம் ட்ரெய்னரும் அந்த வீடியோவில் பேசியுள்ளனர்.

MUST READ