நடிகர் ஜீவா சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் சிவகார்த்திகேயன் குறித்து பேசி உள்ளார்.
தமிழ் சினிமாவில் ராம், கற்றது தமிழ், ஈ போன்ற பல வெற்றி படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஜீவா. இவரது நடிப்பில் கடந்த ஆண்டு பிளாக் எனும் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்தது இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் அகத்தியா திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 28ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தை பா. விஜய் எழுதியுள்ள நிலையில் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. இப்படத்தில் ஜீவாவுடன் இணைந்து ராஷி கன்னா, அர்ஜுன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். மிஸ்டரி திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதேசமயம் இந்த படம் தொடர்பான ப்ரமோஷன் போன்ற மற்ற பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் ஜீவா, சிவகார்த்திகேயன் குறித்து பேசியுள்ளார்.
அதாவது கடந்த 2013ஆம் ஆண்டு ஐ.அகமது இயக்கத்தில் ஜீவா, திரிஷா, வினய், சந்தானம் ஆகியோரின் நடிப்பில் வெளியான என்றென்றும் புன்னகை திரைப்படத்தில் முதலில் வினய் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் தான் நடிக்க இருந்தார் என்றும் ஆனால் ஒரு சில காரணங்களால் அந்த கதாபாத்திரத்தில் வினய்யை நடிக்க வைத்தோம் என்றும் கூறியுள்ளார்.