Homeசெய்திகள்சினிமாஇந்த படத்தில் சூப்பர் ஸ்டார் யாருன்னா..... 'கூரன்' படம் குறித்து எஸ்.வி. சந்திரசேகர்!

இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் யாருன்னா….. ‘கூரன்’ படம் குறித்து எஸ்.வி. சந்திரசேகர்!

-

- Advertisement -

எஸ்.வி. சந்திரசேகர், கூரன் படம் குறித்து பேசி உள்ளார்.இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் யாருன்னா..... 'கூரன்' படம் குறித்து எஸ்.வி. சந்திரசேகர்!

தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட வெற்றி படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் எஸ்.வி. சந்திரசேகர். இவர் நடிகர் விஜயின் தந்தை என்பது அனைவரும் அறிந்ததே. இவர் படம் இயக்குவதில் மட்டுமல்லாமல் தற்போது நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே ட்ராபிக் ராமசாமி போன்ற படங்களில் நடித்திருக்கிறார். அடுத்தது இவர், கூரன் எனும் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்த படத்தில் எஸ்.வி. சந்திரசேகர் தவிர ஒய்.ஜி. மகேந்திரன், பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியான், இந்திரஜா ரோபோ சங்கர் மற்றும் பலர் நடித்துள்ளார்கள். இந்த படத்தை அறிமுக இயக்குனர் நிதின் வேமுபதி இயக்க மார்ட்டின் தன்ராஜ் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். சித்தார்த் விபின் இசையமைத்திருக்கிறார். இப்படத்தை விபி கம்பைன்ஸ் நிறுவனமும் கனா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து இருக்கிறது. இந்த படமானது ஒரு நாய்க்கான சட்ட உரிமை போராட்டத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் யாருன்னா..... 'கூரன்' படம் குறித்து எஸ்.வி. சந்திரசேகர்!அதன்படி சமீபத்தில் வெளியான டிரைலரும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய எஸ்.வி. சந்திரசேகர், “என்னுடைய 45 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் கூரன் திரைப்படம் மிகவும் வித்தியாசமான படம். இந்த படத்தில் நடிச்ச அந்த பைரவா தான் சூப்பர் ஸ்டார். நாங்கள் எல்லோரும் துணை நடிகர்கள், உதிரிப்பூக்கள். ஒரு பெரிய மாலையை அந்த பைரவாவிற்கு தான் போட வேண்டும். நான் திருப்தியாக நடித்த படம் இதுதான்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த படம் வருகின்ற பிப்ரவரி 28ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ