Homeசெய்திகள்அரசியல்இதெல்லாம் 2026-ல் பாஜக ஆட்சிக்கு வந்தால் மட்டுமே நடக்கும்..! அடித்துச் சொல்லும் அண்ணாமலை

இதெல்லாம் 2026-ல் பாஜக ஆட்சிக்கு வந்தால் மட்டுமே நடக்கும்..! அடித்துச் சொல்லும் அண்ணாமலை

-

- Advertisement -

”தமிழகத்தில் கஞ்சா, குட்கா என்னென்ன இருக்கிறதோ அவையெல்லாம் ஒழிக்க வேண்டும் என்றால் 2026-ல் பாஜக ஆட்சிக்கு வருவது மட்டுமே” என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை அடித்துச் சொல்கிறார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, ”உதயநிதி ஸ்டாலின் சொல்கிறார், ‘ நாங்கள் தான் அரசு பள்ளியில் ஓசியில் சாப்பாடு போடுகிறோம்’ என்கிறார். நாங்கள் தான் அரசு பள்ளிகளில் ஓசியில் பள்ளி சீருடை கொடுக்கிறோம் என்கிறார். நாங்கள் தான் அரசு பள்ளியில் ஓசியில் ஷூ கொடுக்கிறோம் என்கிறார். அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன்.

தமிழகம் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாக மாறிவிட்டது  - அண்ணாமலை கண்டனம்

அது உங்க அப்பன் வீட்டு பணத்தில் இருந்தா கொடுக்கிறீர்கள். மக்கள் கொடுக்கக்கூடிய வரிப்பணத்தில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவச் செல்வங்களுக்கு எங்களிடமிருந்து வாங்கக்கூடிய வரிப்பணத்தில் நீங்கள் சீருடை, மதிய உணவு கொடுக்கிறீர்கள். உங்கள் குடும்பத்து பணத்தில் இருந்து கொடுக்கிறீர்களா? இல்லை உங்கள் அப்பன், தாத்தா பணத்தை கொடுக்கிறீர்களா? அப்படி இருக்கும்போது பொறுப்பற்ற முறையில் ஓசியில் கொடுக்கிறேன், இலவசமாக கொடுக்கிறேன் என்றெல்லாம் கருத்து சொல்லக்கூடாது.

அது மட்டும் இல்லாமல், அண்ணாமலை தரமாக பேச வேண்டும்… தரம் இல்லாதவர் என்கிறார். இன்னைக்கு யாரு தரமானவர்கள் என்று பேசுவோம். உதயநிதி ஸ்டாலின் ஏற்கனவே பேசிய சில தரமற்ற வார்த்தைகளை நான் உங்களிடம் எடுத்துக் காட்டுகிறேன். முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பற்றி உதயநிதி என்ன சொன்னார் தெரியுமா? ‘விட்டால் எடப்பாடி பழனிசாமி, சசிகலா அம்மையார் காலுக்குள் ஊர்ந்து சென்று இருப்பார்” என்று சொன்னார்.

காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவுக்கு  துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், விஜய் இரங்கல்…

அடுத்து எடப்பாடி பழனிச்சாமி, மோடியை பார்த்தால் படுத்து விடுவார். அமித்ஷாவை பார்த்தால் நடுங்கி விடுவார். சசிகலா அம்மையாரைப் பார்த்தால் முட்டி போடுவார். ஐயா உதயநிதி ஸ்டாலின் உதித்த பழமொழிகளில் இதுவும் ஒன்று. ‘இனிமேல் பிரதமர் மோடியை 29 பைசா மோடி என்று தான் சொல்லுவேன்’ என்றார். ‘அருண் ஜெட்லியையும், சுஷ்மா சுவராஜையும் கொன்றவர்மோடி’ என்று வதந்தி பரப்பினார். நிர்மலா சீதாராமனை பார்த்து, ‘நாங்கள் ஒன்றும் உங்கள் அப்பன் வீட்டு பணத்தை கேட்கவில்லை’ என்றார். கவர்னரை மக்கள் செருப்பால் அடிப்பார்கள் என்றார். ஆகையால் உதயநிதி ஸ்டாலினுக்கும், தரத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

தரமில்லாத அரசியல்வாதி ஒருவர் தமிழ்நாட்டில் இருக்கிறார் என்றால் அது உதயநிதிதான். தாத்தா பெயர், அப்பா பெயரை வைத்து ஓட்டிக் கொண்டிருக்கிறார். நாங்கள் அடிப்படை ஆதாரத்தோடு கேள்வி கேட்டோம். அரசு பள்ளியில் மட்டும் கட்டாயப்படுத்தி இரு மொழியில் தான் படிக்க வேண்டும் என்று ஏன் சொல்கிறீர்கள் என்று கேட்டோம். தரம் இல்லாமல் பேசினீர்கள் என்றால் தரம் இல்லாமல் தான் உங்களுக்கு பதில் வரும். பிரதமருக்கோ, நிதித்துறை அமைச்சருக்கோ மரியாதை கொடுக்காமல் பேசினால் உங்களை உங்கள் பாணியில் பேச எங்களுக்கும் தெரியும்.

நேற்று நாங்கள் ஆரம்பித்து இருப்பது வெறும் டிரைலர்தான். தமிழகத்தின் முதலமைச்சர் நேற்று கோலம் போடுகிறார்கள் ஒரு இடத்தில்… அதை ட்வீட் போடுகிறார். அதன் பிறகு இன்னொரு தனியார் தொலைக்காட்சி அதை போய் படம் பிடித்து திமுஅக்வின் நாடகத்தை அம்பலப்படுத்தியது. தமிழகத்தில் கஞ்சா, குட்கா என்னென்ன இருக்கிறதோ அவையெல்லாம் ஒழிக்க வேண்டும் என்றால் 2026-ல் பாஜக ஆட்சிக்கு வருவது மட்டுமே. இரும்பு கரத்தை கொண்டு அடக்கக்கூடிய ஒரே கட்சி பாஜக மட்டும் தான் அதற்கு மக்கள் எங்களுக்கு வாய்ப்பு கொடுப்பார்கள் என்று நம்புகிறோம்.

பாலியல் வழக்குகள் அதிகமாகவதற்கு காரணம் இன்று உள்ள சமூக ஊடக வலைதளங்கள். கல்லூரி மாணவர்களிடையே அதன் தாக்கம் அதிகமாக இருக்கிறது. நாம் எல்லா இடத்திலும் காவல்துறையை குறை சொல்லிக் கொண்டிருக்க முடியாது. அது ஒரு பக்கம் இருக்கட்டும். சமூக வலைதளங்களில் ஆபாசமான விஷயங்கள் எல்லாருடைய இல்லத்திலும் வாசலை தாண்டி ஆபாசங்கள் செல்போனில் வந்து உட்காருகின்றன. உலகம் அது போல் மாறிவிட்டது. நமது குழந்தைகளுக்கும் நல்லது, கெட்டது சொல்வதற்கான குடும்பச் சூழலும் கெட்டுவிட்டது” எனக் கூறினார்.

 

MUST READ