Homeசெய்திகள்சினிமாஅஜித் பிறந்தநாளில் வெளியாகிறதா 'குட் பேட் அக்லி'?

அஜித் பிறந்தநாளில் வெளியாகிறதா ‘குட் பேட் அக்லி’?

-

- Advertisement -

குட் பேட் அக்லி திரைப்படம் அஜித்தின் பிறந்தநாளில் வெளியாகும் என புதிய தகவல் கிடைத்துள்ளது.அஜித் பிறந்தநாளில் வெளியாகிறதா 'குட் பேட் அக்லி'?

மார்க் ஆண்டனி படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தற்போது குட் பேட் அக்லி எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படம் அஜித்தின் 63 வது படமாகும். இந்த படத்தில் அஜித் தவிர திரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், பிரபு, சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைக்கிறார். ஆக்சன் கலந்த கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில் இந்த மாத இறுதியில் இருந்து குட் பேட் அக்லி படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என நம்பப்படுகிறது. அஜித் பிறந்தநாளில் வெளியாகிறதா 'குட் பேட் அக்லி'?இதற்கிடையில் இந்த படமானது 2025 ஏப்ரல் 10 அன்று திரைக்கு வரும் என படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது கிடைத்த தகவலின் படி இந்த படத்தை மே 1 அன்று அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு திரைக்கு கொண்டு வர நடிகர் அஜித்தே விரும்புவதாகவும் இது தொடர்பாக படக்குழு ஆலோசித்து வருவதாகவும் லேட்டஸ்ட் அப்டேட் வெளிவந்துள்ளது. இருப்பினும் படக்குழுவினர் இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

MUST READ