Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்வயிற்றுப் புண்ணை ஓட ஓட விரட்டும் நிவாரணிகள்!

வயிற்றுப் புண்ணை ஓட ஓட விரட்டும் நிவாரணிகள்!

-

- Advertisement -

பொதுவாக வயிற்றுப் புண்கள் சுகாதாரமற்ற உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் அதில் இருக்கும் பாக்டீரியாக்களினால் ஏற்படுகிறது. மேலும் மன அழுத்தம் போன்றவைகளும் வயிற்றுப் புண்களை உண்டாக்கக்கூடும். வயிற்றுப் புண்ணை ஓட ஓட விரட்டும் நிவாரணிகள்!அடுத்தது காலை உணவை தவிர்ப்பது, தவறான உணவு பழக்கங்கள், தாமதமாக உணவு உண்பது, அதிக அளவில் எண்ணெய் பலகாரங்கள் எடுத்துக் கொள்வது, நாளொன்றுக்கு 2 முறைக்கு மேல் டீ – காபி குடிப்பது, மதுப்பழக்கம், புகைப்பிடித்தல் போன்றவை வயிற்றுப்புண்கள் ஏற்பட முக்கிய காரணங்களாகும். மேலும் உடலில் அதிக அளவிலான சூடு இருப்பதன் காரணமாகவும் வயிற்றுப்புண்கள் உண்டாகும்.

தீர்வுகள்:

1. வயிற்றுப் புண்கள் ஏற்படாமல் இருக்க உணவில் அடிக்கடி தயிர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.வயிற்றுப் புண்ணை ஓட ஓட விரட்டும் நிவாரணிகள்! 2. மூன்று வேளைகளிலும் தவறாமல் உணவு உண்ண வேண்டும்.
3. மணத்தக்காளி கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது வயிற்றுப் புண்ணை விரைவில் குணமடைய செய்யும்.
4. பாகற்காய் சாப்பிடுவது உடலுக்கு நல்லது. ஆனால் பாகற்பழம் வயிற்றில் உள்ள கிருமிகளை அழித்து குடலை சுத்தமாகி பலப்படுத்தும்.
5. சோற்றுக்கற்றாழையின் சதைப்பகுதியினை தண்ணீர் விட்டு நன்கு கழுவி அத்துடன் இஞ்சி, புதினா சேர்த்து அரைத்து மோரில் கலந்து குடித்து வர நல்ல பலன் கிடைக்கும்.வயிற்றுப் புண்ணை ஓட ஓட விரட்டும் நிவாரணிகள்! 6. பிரண்டைக் கீரை, பிரண்டைத் துவையல் போன்றவைகளை எடுத்துக் கொள்ளலாம்.
7. வாகை மரத்தின் பிசின் எடுத்து அதனை பொடி செய்து பாலில் கலந்து சாப்பிட்டு வர வயிற்றுப்புண் குணமாகும்.
இருப்பினும் இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது.

MUST READ