கிருஷ்ணகிரி மலைக்கு ஆண் நண்பர்களுடன் சாமி கும்பிட வந்த பெண்ணை நான்கு பேர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை – தப்பியோடிய குற்றவாளியை போலீசார் துப்பாக்கியால் சூட்டு பிடித்தனர் – 4 பேர் கைது – குற்றவாளிகள் தாக்கியதில் போலீசார் காயம்.
திருப்பத்தூர் மாவட்டத்தை சார்ந்த 35 வயது ஆணுடன் அவரது உறவுமுறை கொண்ட 30 வயது பெண் இருவரும் கடந்த 18ஆம் தேதி கிருஷ்ணகிரி நகரில் அமைந்துள்ள 2000 அடி உயரம் உள்ள மலை மீது உள்ள தர்காவிற்கு சாமி கும்பிட வந்துள்ளனர். தர்காவில் சாமி கும்பிட்ட இருவரும் வெயில் காரணமாக மலையில் இருந்து இறங்காமல் அங்கேயே சற்று ஓய்வு எடுத்துள்ளனர். அந்த சமயம் அங்கு சென்ற நான்கு இளைஞர்கள் இவர்களை மிரட்டி அவர்களிடம் இருந்த தங்க தோடு, செயின், இடுப்பில் இருந்த வெள்ளி செயின், மற்றும் கையில் இருந்த ₹ 3 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை பறித்துள்ளனர்.
மேலும் அவர்களின் செல்போனில் இருந்து 7,000 ரூபாய் பணத்தை கூகுள் பே மூலம் மிரட்டி பெற்றுள்ளனர். மேலும் இருவரையும் சரமாரியாக தாக்கி உள்ளனர். பின்னர் அந்த பெண்ணை மிரட்டி வலுக்கட்டாயமாக நான்கு பேரும் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து உள்ளனர். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்று உள்ளது. அந்த சமயம் அவர்களது செல்போனில் வீடியோவும் பதிவு செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட இருவரும் தனக்கு நேர்ந்த கொடுமையை யாரிடம் சொல்வது என தெரியாமல் மலையை விட்டு கீழே உள்ள சிலரிடம் தெரிவித்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பி உள்ளனர். இதை அடுத்து 19ஆம் தேதி இது போன்ற சம்பவம் நடந்தது காவல்துறைக்கு தெரிய வருகிறது. பாதிக்கப்பட்ட நபரை அணுகி போலீசார் அவரிடம் புகார் மனு பெற்றனர். அதன் அடிப்படையில், மலையின் மேல் அந்த சமயத்தில் இருந்தவர்களின் டவர் லொகேஷன் சோதித்து, கிருஷ்ணகிரி நகரை சேர்ந்த சுரேஷ் (23), நாராயணன் (22), அபிஷேக் (21), கலையரசன் (22), ஆகிய நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். நேற்று இரவு அபிஷேக், கலையரசன், ஆகிய இருவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் முதல் குற்றவாளியாக கருதப்படும் சுரேஷ் மற்றும் இரண்டாவது குற்றவாளி நாராயணன் ஆகியோர் கிருஷ்ணகிரி அருகே பொன்மலை குட்டை பெருமாள் கோவில் பின்புறம் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் கிருஷ்ணகிரி நகர காவல் ஆய்வாளர் வெங்கடேஷ் பிரபு, உதவி ஆய்வாளர் பிரபாகரன், ஆகியோர் கொண்ட போலீசார் அவர்களை பிடிக்க சென்றபோது கத்தியால் முதன்மையாகப் பயன்படுத்துகின்றன காவலர் குமார், மற்றொரு காவலர் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.குற்றவாளிகளை சரணடைய வலியுறுத்தினர் ஆனால் அவர்கள் போலீசாரை தாக்கும் நோக்கத்தில் செயல்பட்டதால் பாதுகாப்பிற்காக போலீசார் துப்பாக்கியால் குற்றவாளிகளை நோக்கி சுட்டனர். இதில் சுரேஷ் வலது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து கீழே விழுந்தார். நாராயணன் தம்பி ஓடும்போது கீழே விழுந்து அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இருவரையும் பிடித்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். காயம் அடைந்த காவலர்கள் விஜய குமார் மற்றும் குமார் ஆகிய இருவர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காயமடைந்த போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சங்கர், டிஎஸ்பி முரளி, ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினர். இந்த சம்பவம் தொடர்பாக 1 சுரேஷ், 2 நாராயணன், 3 அபிஷேக், 4 கலையரசன், ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் மீது ஏற்கனவே வழிப்பறி, கொள்ளை, பாலியல் வழக்குகள், உள்ளது என போலீசார் தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி நகரில் பட்டப்பகலில் தொல்லியல் துறைக்கு சொந்தமான மலை மீது சாமி கும்பிட வந்த நபர்களை தாக்கியும், பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் போலீசார் தீவிர முயற்சியால் இந்த சம்பவத்தில் புகார் மனு பெறப்பட்டு குற்றவாளிகள் நான்கு பேரை 24 மணி நேரத்திற்கு துப்பாக்கியால் சுட்டு கைது செய்து இருப்பது பொது மக்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது.
கும்பமேளாவில் குளிக்கும் பெண்களின் அரை நிர்வாண வீடியோ… டார்க் வெப்பில் பதிவேற்றம்..!