HomeBreaking News'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்திலிருந்து 'முகை மழை' பாடல் வெளியீடு!

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்திலிருந்து ‘முகை மழை’ பாடல் வெளியீடு!

-

- Advertisement -

டூரிஸ்ட் ஃபேமிலி படத்திலிருந்து முகை மழை எனும் பாடல் வெளியாகி உள்ளது.'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்திலிருந்து முகை மழை பாடல் வெளியீடு!சசிகுமார் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் டூரிஸ்ட் ஃபேமிலி. இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருக்கிறார். அதன்படி இருவரும் கணவன் – மனைவியாக நடித்திருக்கின்றனர். மேலும் இவர்களுடன் இணைந்து யோகி பாபு, மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், எம் எஸ் பாஸ்கர், ரமேஷ் திலக் ஆகியோர் நடித்திருக்கின்றனர். இந்தப் படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கியிருக்கிறார். ஷான் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைக்க அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்து படமானது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. எனவே குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தை திரையில் காண ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தில் இருந்து ‘முகை மழை’ எனும் முதல் பாடல் தற்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்தப் பாடலை ஷான் ரோல்டன், சைந்தவி ஆகிய இருவரும் இணைந்து பாடி இருக்கும் நிலையில் மோகன் ராஜன் இப்பாடல்வரிகளை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ