Homeசெய்திகள்கட்டுரைசொந்த செலவில் சூனியம்! அண்ணாமலைக்கு விழுந்த டோஸ்!

சொந்த செலவில் சூனியம்! அண்ணாமலைக்கு விழுந்த டோஸ்!

-

- Advertisement -

தமிழ்நாட்டில் பாஜக 2-வது இடத்திற்கு வந்துவிட்டதாக ஒரு பிரம்மையை ஏற்படுத்துவது தான் அண்ணாமலையின் திட்டம் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.

திமுக – பாஜக இடையிலான சமூக வலைதள டிரெண்ட்டிங் மோதலின் பின்னணி குறித்தும், அண்ணாமலையின் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு குறித்தும் யூடியூப் சேனல் ஒன்றுக்கு தராசு ஷியாம் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- கெட்அவுட் மோடி! கெட்அவுட் ஸ்டாலின்! என்று இன்று டிவிட்டரில் டிரெண்டிங் செய்வது என்பது அண்ணாமலை அரசியல் செய்கிறார் என்பதை காட்டுகிறது. இன்றைய நிலையில் தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளின் நிலை என்பது. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கையில் 40% வாக்குகள் வைத்துள்ளனர். அதற்கு எதிராக உள்ள 60 சதவீதம் வாக்குகள் பிளவுபட்டால் மீண்டும் இந்த 40% ஆட்சிக்கு வந்துவிடும். இதில் 2வது இடத்தில் அதிமுக உள்ளது. ஆனால் இன்றைய தேதியில் அவர்களிடம் 20% வாக்குகள் தான் உள்ளது. சட்டமன்ற தேர்தல் என்றால் 25% வரலாம். கூட்டணி என்று பார்த்தால் இன்றை தேதிக்கு தேமுதிக மட்டும்தான் உள்ளது. திமுக 40%, அதிமுக 25% வாக்குகள் என 65% வாக்குகள் இதற்குள் அடங்குகிறது. எஞ்சிய 35 சதவீதத்தில் பகிர்ந்துகொள்ள புதுவரவாக விஜய். அவர் எவ்வளவு வாக்குகள் வாங்க போகிறார் என தெரியவில்லை. அவருக்கு 10 சதவிகிதம் வாக்குகள் என்று வைத்தாலும், மீதமுள்ள 25 சதவீதத்தில் ஏற்கனவே சீமான் 7 – 8% வாக்குகள் கைவசம் வைத்துள்ளார். பிறகு பாஜக கூட்டணி. இந்த கூட்டணியின் அடுத்த முயற்சி என்னவாக இருக்கும்? டெல்லி போன்ற மாநிலங்களில் பாஜக இத்தனை ஆண்டுகளுக்கு பின்னர் எப்படி ஆட்சிக்கு வந்துள்ளது. எப்படி என்றால் பாஜகவை, அரசியல் உரையாடல்களில் இரண்டாவது இடத்திற்கு நகர்த்துவது. இன்று நாமே டிவிட்டரில் திமுக Vs  பாஜக டிரெண்டிங் குறித்து பேசுக் கொண்டிருக்கிறோம் அல்லவா.

டிவிட்டரில் ட்ரெண்ட் ஆகினால் வாக்குகளாக மாறுமா?. டிவிட்டர் டிரெண்டிங் என்ற ஒன்றை கொண்டு வந்ததே பாஜகதான். குறிப்பாக 2014ல் பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்த பின்னர் வடஇந்திய ட்விட்டர் பாலிடிக்ஸ் தமிழ்நாட்டிற்கு வந்தது. டிவிட்டரில் ட்ரெண்டிங் என்பது ஆட்களை வைத்துதான் செய்கிறார்கள் என்று நாம் எல்லோருக்கும் தெரியும். இது ஒரு பிரம்மை. எனது கல்லூரி காலத்தில் ரூ.2, ரூ.5க்கு நுழைவு டிக்கெட்டுகளை வாங்கிக்கொண்டு நாங்கள் அண்ணா, கலைஞரின் பேச்சை கேட்பதற்காக பொதுக்கூட்டத்திற்கு செல்வோம். 1967, 1971 என்று இப்படியே போய், இன்று ரூ.200 கொடுத்தால்தான் கூட்டத்திற்கு ஆட்களே வருகிறார்கள். இதுதான் எதார்த்தமான உண்மை. இப்படியான சூழலில் எல்லோரும் பிரம்மாண்டமான கூட்டத்தை கூட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கேமராவுக்கு கூட்டம் சேர்ப்பதற்கும், டிவிட்டரில் டிரெண்ட் செய்வதற்கும் பெரிய வித்தியாசம் கிடையாது.

அண்ணாமலையை பொறுத்தவரை அவரது அரசியல் தெளிவாக உள்ளது. அது என்ன என்றால், பாஜக 2வது இடத்திற்கு வந்துவிட்டதாக ஒரு பிரம்மையை ஏற்படுத்துவது ஆகும். இன்றைய நிலையில் பாஜகவுடன், பாமக மட்டுமே கூட்டணியில் உள்ளது. இதே நிலையில் அவர்கள் 2026 சட்டமன்ற தேர்தலை சந்தித்தால், எந்த இடத்தில் பாஜக இருக்கும்? எதார்த்தமாக பேசுவோம். திரைப்பட நடிகரான விஜய் ரூ.200 கொடுத்து கூட்டம் கூட்ட வேண்டிய அவசியம் இல்லை. உண்மையாக ஒரு ஆட்சியை மக்கள் எப்போது ஆதரிப்பார்கள்?. ஆட்சியினால் பலன்கள் நுகரப்படும் போதுதான். அரசியல் கட்சிகளால் எல்லா காலகட்டத்திலும் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற முடியாது. பேரறிஞர் அண்ணாவே எங்கள் காலத்தில் 3 படி அரிசி வாக்குறுதி அளித்தார். நாங்கள் தட்டுப்பாடு யுகத்தில் வாழ்ந்தவர்கள். அரசிக்கு வரிசையில் நின்றவர்கள். 3 படி அரசி என்பது அன்று கவர்ச்சியானது. ஒரு படி அரிசி போட முயற்சித்தார்கள் அதுவும் உண்மை. இன்றைக்கு இலவச அரிசி போடுகிறார்கள். எதற்காக நான் இதை சொல்கிறேன் என்றால், காலப்போக்கில் பல விஷயங்கள் மாறுகிறது. பாஜக எதற்கு இருமொழி கொள்கை தொடர வேண்டும் என்று கேட்டால், அதற்கான பதில் மாணவர்களின் எதிர்கால நலன் என்னவோ, அதற்கு மாநில கல்விக் கொள்கை இருக்க வேண்டும். அதற்கு கல்வி மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்பதுதான்.

மொழி சார்ந்த அரசியல் உரையாடல் தமிழ்நாட்டின் பிரச்சினைகளையோ, இந்தியாவின் பிரச்சினைகளையோ தீர்க்குமா? அதற்கு வாய்ப்பு கிடையாது. மொழி தேவையின் அடிப்படையிலானது. அண்ணாமலை அடிப்படையான அறிவோடு பேச வேண்டும். ஒன்று மொழி வரலாறு தெரிய வேண்டும். அல்லது மாணவர்களிடம் நேரடியாக பேசி அவர்களது பிரச்சினைகளை தெரிந்துகொள்ள வேண்டும். எதையுமே தனது அரசியலுக்காக செய்யும்போது அண்ணாமலை மீது வெறுப்புதான் வருகிறது. வெறுமனே அரசியல் நிலைப்பாடுதான் எடுக்கிறது என்று அவர் முடிவு செய்தால், அவரே வந்து எவ்வளவு நாளைக்கு மாநில தலைவராக பாஜகவில் இருந்துவிடுவார். மாநில கட்சி என்றால் மாநிலத்திற்குள் கட்சியின் ஸ்தாபிதம் இருக்கும். 1949ல் வந்த திமுக இன்று வரை தமிழ்நாட்டில் இருக்கிறது. மாநிலத்தின் பல்வேறு பிரச்சினைகளை, போராட்டங்களை, அரசியல் சூழல்களை கடந்த 75 ஆண்டுகளாக கையாண்டிருப்பார்கள்.

ஆனால் தேசிய கட்சிகளுக்கு அந்த வாய்ப்பு எங்கேயும் கிடையாது. மாநில தலைவர்கள் மாறிக் கொண்டே இருப்பார்கள். அப்படி என்றால் அண்ணாமலை எவ்வளவு நாட்கள் மாநில தலைவராக இருப்பார். ஆனால் அவர் தமிழ்நாட்டின் சில அடிப்படையான விஷயங்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கிறார். எதிரான நிலைப்பாட்டிற்கு ஆதரவு இருக்குமா என்றால்? இருக்கலாம். ஆனால் அவரை பதவியில் இருந்து நீக்கிவிட்டால், அந்த ஆதரவு நிலைப்பாடு மாறும். அப்படி என்றால் அண்ணாமலையின் நோக்கம் என்னவாக இருக்கும்?. கட்சி மேலிடம் தன்னை நீக்கினாலும், நாம் இங்கே குறிப்பிடத்தகுந்த தலைவராக இருக்க வேண்டும் என்பதுதான். அண்ணாமலை பாஜகவுக்கு தான் சவால் விடுகிறார். அவரை பொறுத்தவரை அண்ணாமலை என்ற பெயர் கடந்த 2021 முதல் 3 வருடமாகதான் டிரெண்டிங்கில் உள்ளது. அவர் இன்னும் ஒன்றரை ஆண்டுகள் பதவியில் இருந்தாலும் தூக்கிவிடுவார்கள்.

Annamalai

பாஜகவின் பழைய வரலாறு அண்ணாமலைக்கு தெரியுமா? இல.கணேசன்  இருமொழி கொள்கையை ஆதரித்தார் என்பது அவருக்கு தெரியுமா?. பொன்.ராதாகிருஷ்ணன் மாநிலங்களுக்கு கல்வி உரிமை இருக்க வேண்டும் என்று பேசியது உங்களுக்கு தெரியுமா? தமிழிசையின் தந்தை குமரி ஆனந்தன், அவர் மாநில கல்வி, தமிழ்மொழி குறித்து எவ்வளவு பேசியுள்ளார் என்பது உங்களுக்கு தெரியுமா? ஏன் தமிழிசையே பேசியுள்ளார். அண்ணாமலைக்கு அந்த வரலாறு தெரிந்தாலும், தெரியாவிட்டாலும் எடுத்துக்கொள்ள மாட்டார்.  அவர் தமிழ்நாட்டில் மோடியின் இமேஜைவிட தனது இமேஜை பெரிதாக வளர்க்க வேண்டும் என்று பார்க்கிறார். அப்போது அவருக்கான வாய்ப்பு என்ன? இதேபோல் சிந்தனை 1994ல் வாழப்பாடி ராமமூர்த்திக்கு இருந்தது. நரசிம்மராவ் ஆட்சியில் அர்ஜுன் சிங், என்.டி.திவாரி போன்ற மூத்த தலைவர்கள் தேசிய அளவில் போர்க்கொடி தூக்கியபோது, வாழப்பாடி ராமமூர்த்தி அவர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தார். ஏனென்றால் அவர் இங்கே குறிப்பிடத்தக்க தலைவராக அவர் வளர்ந்து விட்டார். அதன் பிறகு தமிழ்நாடு ராஜிவ் காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். அது 1998ல் அதிமுகவுடன் கூட்டணி வைத்து ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. அப்போது இவர்களது நோக்கம் என்ன என்றால் அரசியல் தலைவர்களாக தங்களுக்கு என்று தனியாக ஒரு தளத்தை  உருவாக்கி கொள்வது. நாளை அண்ணாமலை பாஜகவில் இல்லை என்று வைத்துக்கொள்வோம் என்றால், அவரை சுற்றி ஒரு வட்டம் இருக்குமல்லாவா? இதுதான் அவர்கள் நோக்கம்.

வெளிப்படையாக நமக்கு தெரிகிறது, அண்ணாமலை ஏன் இதெல்லாம் பேசுகிறார் என்று நினைக்கிறீர்கள் தானே.  அதற்கு காரணம் அவர் தன்னை வளர்த்துக்கொள்ள பார்க்கிறார். ஏன் அவர் உதயநிதிக்கு சவால் விடுகிறார். ஒரு காலத்தில் உதயநிதி தலைமையில் திமுக இயங்கினாலோ அல்லது உதயநிதி Vs எக்ஸ் என்று வந்தாலோ, அந்த எக்ஸ் என்ற இடத்தில் தன்னை வந்து நிறுத்தப்பார்க்கிறார். 2029ல் உதயநிதி, விஜய், அண்ணாமலை என்று தமிழ்நாட்டில் அரசியல் உரையாடல் கட்டமைக்கப்பட்டால், அப்போது அண்ணாமலை பாஜகவிலேயே இல்லை என்றால், அப்போதும் அண்ணாமலைக்கான அரசியல் வளையம் கிடைத்துவிடும் அல்லவா? தமிழ்நாட்டில ஆட்சியை பிடிப்பதுதானே பாஜகவின் எண்ணமாக இருக்க வேண்டும். 2031ஆம் ஆண்டில் பாஜகவில் மோடியே இருக்க மாட்டார். ஆனால் தமிழ்நாட்டில் நாம் இருப்போம் என அண்ணாமலை நினைக்கிறார். அளவிற்கு அதிகமாக வளர்த்து விடப்படும் தலைவர்கள் எல்லாம் தனிக் கட்சிதான் தொடங்குவார்கள். அதை நோக்கிய பயணம்தான் இது என்பது எனது பார்வை.

பொதுவாக அரசியல் தலைவர்கள் அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசுவது மக்களிடம் அருவருப்பைத்தான் ஏற்படுத்தும். சொல் பிரயோகம் சரியில்லை என்றால் வாக்குகள் கிடைக்காது. ஒருவர் எம்எல்ஏ வேட்பாளராக நிற்கிறார் என்றால் அவர் கலைஞர் வேட்பாளர், ஜெயலலிதா வேட்பாளர் என்றுதான் வாக்காளர்கள் பார்ப்பார்கள். அப்படி அண்ணாமலை வேட்பாளர் என்று தமிழ்நாட்டில் எதிர்காலத்தில் அவர் நிறுத்த வேண்டும் என்று நினைத்தார் என்றால் இது சரிபட்டு வராது. பாஜக வேட்பாளர் என்று நிறுத்த வேண்டும் என நினைத்தால், பாஜக வேட்பாளர் ஒழிந்து விடுவார். அதற்கு காரணம் அண்ணாமலை பயன்படுத்தும் சொற்பிரயோகம் பாஜக வேட்பாளர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தும். இப்படி எல்லாம் ரொம்ப பெரிதாக பேசியவர்கள் எல்லாம் எதிர்காலத்தில் பரிணமிக்காமல் போய்விட்டனர். அண்ணாமலை செய்த தவறுகளுக்கு எல்லாம் 2026 சட்டமன்ற தேர்தலில் தக்க பதிலடி கிடைக்கும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ