நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
தனுஷின் இயக்கத்தில் உருவாகி இருந்த நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் நேற்று (பிப்ரவரி 21) திரைக்கு கொண்டுவரப்பட்டது. ரொமான்டிக் காதல் கதைக்களத்தில் உருவாகியிருந்த இந்த படத்தை உண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். இதில் தனுஷின் அக்கா மகன் பவிஷ் கதாநாயகனாக நடிக்க அனிகா சுரேந்திரன் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் இவர்களுடன் இணைந்து மேத்யூ தாமஸ், பிரியா வாரியர், ரம்யா ரங்கநாதன், சரத்குமார், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவிற்கு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் இப்படம் முதல் நாளில் உலக அளவில் ரூ.3 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது என சொல்லப்படுகிறது. மேலும் நேற்று பிரதீப் ரங்கநாதனின் டிராகன் திரைப்படமும் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது. இந்த படம் பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே படத்தை போல் அதிரபுரி வரவேற்பை பெற்று வருகிறது. எனவே டிராகன் படத்தால் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் வசூல் பாதிக்கப்படுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதே சமயம் குட்டி தனுஷால் பெரிய தனுஷுக்கு சிக்கல் வந்துள்ளதாக ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர்.