தமிழ் சினிமாவில் ஆதிக் ரவிச்சந்திரன், திரிஷா இல்லனா நயன்தாரா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். அதைத் தொடர்ந்து இவர் சில படங்கள் இயக்கி இருந்தாலும் மார்க் ஆண்டனி திரைப்படம் தான் இவருக்கு நல்ல பெயரையும் புகழையும் பெற்று தந்தது. இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த நிலையில் அஜித்தை இயக்கும் வாய்ப்பு ஆதிக் ரவிச்சந்திரனுக்கு கிடைத்தது. அதன்படி அஜித்தின் 63வது படமான குட் பேட் அக்லி படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.
அடுத்தது இந்தப் படத்தில் டீசர் இந்த மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இப்படமானது வருகின்ற ஏப்ரல் 10ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் ஆதிக் ரவிச்சந்திரன் குறித்து பேசி உள்ளார்.
அதன்படி அவர் பேசியதாவது, “குட் பேட் அக்லி திரைப்படம் ஒரு பயங்கரமான ஃபேன் பாய் சம்பவமாக இருக்கும். ஆதிக்கை போன்ற ஒரு அஜித் ரசிகனை நீங்கள் பார்த்திருக்கவே முடியாது. கல்லூரி காலகட்டத்தில் ஒவ்வொரு அஜித் படத்தின் ரிலீஸ் போதும் அவர் அஜித்தை போன்ற கெட்டப்பில் இருப்பார். அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் முதல் ஷாட்டை இயக்கியதும் கண்ணீர் விட்டார்” என்று தெரிவித்துள்ளார்.
- Advertisement -