Homeசெய்திகள்சினிமாலிஜோ மோல் நடிக்கும் 'ஜென்டில்வுமன்'.... கவனம் ஈர்க்கும் ட்ரைலர்!

லிஜோ மோல் நடிக்கும் ‘ஜென்டில்வுமன்’…. கவனம் ஈர்க்கும் ட்ரைலர்!

-

- Advertisement -

ஜென்டில்வுமன் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.லிஜோ மோல் நடிக்கும் 'ஜென்டில்வுமன்'.... கவனம் ஈர்க்கும் ட்ரைலர்!

நடிகை லிஜோ மோல் மலையாளம், தமிழ் ஆகிய மொழி படங்களில் நடித்து வருபவர். அந்த வகையில் இவர் தமிழில் ஜிவி பிரகாஷ், சித்தார்த் நடிப்பில் வெளியான சிவப்பு மஞ்சள் பச்சை என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். அதைத்தொடர்ந்து இவர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் வெளியான ஜெய் பீம் படத்தில் நடித்து பெயரையும் புகழையும் பெற்றார். மேலும் சமீபத்தில் வெளியான காதல் என்பது பொதுவுடமை என்ற திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் லிஜோ மோல். இதற்கிடையில் இவர் ஜென்டில்வுமன் என்ற திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். இந்த படத்தை கோமளா ஹரி பிக்சர்ஸ் & ஒன் ட்ராப் ஓசன் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்தை ஜோஸ்வா சேதுராமன் இயக்கியிருக்கிறார். இதில் லிஜோ மோல் தவிர ஹரி கிருஷ்ணன், லாஸ்லியா, ராஜீவ் காந்தி, தரணி, வைரபாலன், நந்திதா ஸ்ரீகுமார் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். காத்தவராயன் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இளையராஜா சேகர் இதன் எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து படத்திலிருந்து அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி வருகின்றன.

அடுத்தது இப்படமானது வருகின்ற மார்ச் 7ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த ட்ரெய்லரை பார்க்கும்போது இந்த படமானது கள்ளக்காதல் சம்பந்தமான திரில்லர் ஜானரில் எடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. மேலும் இந்த ட்ரெய்லர் ரசிகர்களின் கவனம் பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ