Homeசெய்திகள்விளையாட்டுசாம்பியன்ஸ் டிராபி: இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 352 ரன்களை சேஸ் செய்து ஆஸி. சாதனை!

சாம்பியன்ஸ் டிராபி: இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 352 ரன்களை சேஸ் செய்து ஆஸி. சாதனை!

-

- Advertisement -

சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி நிர்ணயித்த 352 ரன்கள் என்ற இமாலய இலக்கை சேஸ் செய்து ஆஸ்திரேலிய அணி சாதனை வெற்றி பெற்றது.

9வது ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. நேற்று லாகூரில் நடைபெற்ற லீக் போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை அடுத்து முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியான் பந்துவீச்சை தொடக்கம் முதலே அடித்து ஆடி ரன்களை குவித்தது. 50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 351 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் பென் டக்கெட் அதிரடியா விளையாடி சதம் விளாசினார். அவர் 143 பந்துகளில் 165 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற 352 ரன்கள் என்ற இமாலய இலக்கை இங்கிலாந்து நிர்ணயித்தது.

இதனை அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் ஆரம்பத்தில் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் மற்றும் கேப்டன் ஸ்மித் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்து ஏமாற்றம் அளித்தனர். எனினும் மற்ற வீரர்க்ள் பொறுப்புடன் விளையாடி ரன்களை குவித்தனர். குறிப்பாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜோஸ் இங்கிலிஷ் அபாரமாக விளையாடி 77 பந்துகளில் சதம் விளாசினார். இறுதிக் கட்டத்தில் மேக்ஸ்வெல் அதிரடி காட்ட 47.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 356 ரன்கள் எடுத்து, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. இங்கிலிஷ் 120 ரன்களுடனும், மேக்ஸ்வெல் 32 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனர். மேலும், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிகபட்ச இலக்கை எட்டி ஆஸ்திரேலியா சாதனை படைத்தது.

MUST READ