ரஜினியின் கூலி பட டீசர் தயாராகி விட்டதாக தகவல் கசிந்துள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது கூலி எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படம் ரஜினிகாந்தின் 171 வது படமாகும். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைக்கிறார். இதில் ரஜினியுடன் இணைந்து நாகார்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன், உபேந்திரா, சௌபின் சாகிர் மற்றும் பலர் நடிக்கின்றனர். மேலும் பாலிவுட் நடிகர் அமீர்கான் இந்த படத்தில் கேமியோ ரோலில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. அதன்படி ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஐதராபாத், விசாகப்பட்டினம், சென்னை போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த மாதத்திற்குள் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டு வருவதாக தெரியவந்துள்ளது. இதற்கிடையில் இந்த படத்தின் அறிவிப்பு டீசர் வெளியாகி இணையத்தை கலக்கியது. அடுத்தது இப்படத்திலிருந்து வெளியான சிக்குடு வைப் பாடலின் ப்ரோமோ வீடியோவும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் இன்னும் இரண்டு வாரத்திற்குள் இந்த படத்தின் டீசர் வெளியாக இருக்கிறது என புதிய தகவல் கிடைத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் கூலி படத்தின் டீசரை படக்குழு தயார் செய்து விட்டதாகவும் அதனை ரஜினியும், சன் பிக்சர்ஸ் நிறுவனமும் பார்த்துவிட்டு மகிழ்ச்சியில் இருப்பதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.