Homeசெய்திகள்விளையாட்டுஇன்று முதல் ஐபிஎல் டி20 - CSK vs Gujarat Titans

இன்று முதல் ஐபிஎல் டி20 – CSK vs Gujarat Titans

-

நீண்ட நாளாக கிரிக்கெட் ரசிகர்கள் காத்திருந்த இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) டி20 தொடர் இன்று முதல் தொடங்குகிறது.

முதல் போட்டி குஜராத் அகமதாபாத் நகரின் நரேந்திர மோடி மைதானத்தில் தொடக்க விழா நிகழ்ச்சிகளுடன் ஐபிஎல் தொடர் தொடங்குகிறது. சுமார் நான்கு வருடங்களுக்கு பின், ஐபிஎல் தொடக்க விழா நிகழ்வு நடத்தப்படுகிறது.

2018ஆம் ஆண்டில் தான், கடைசியாக ஐபிஎல் தொடக்க விழா நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 2019இல், புல்வாமா தாக்குதல் சம்பவத்தில் உயிர் தியாகம் செய்த ராணுவத்தினரை நினைவுக்கூரும் பொருட்டு, அந்த சீசனின் தொடக்க விழா கைவிடப்பட்டது.

அதனை தொடர்ந்து, கொரோனா தொற்று காரணமாகவும், பார்வையாளர்கள் அனுமதி குறைவு காரணமாகவும் 2020, 2021, 2022 ஆகிய கடந்த மூன்று சீசன்களிலும் ஐபிஎல் தொடக்க விழா நடைபெறவில்லை.

இன்று முதல் ஐபிஎல் டி20 - CSK vs Gujarat Titans

அந்த வகையில், இன்று நடைபெறும் தொடக்க விழா நிகழ்வில் பிரபல பாலிவுட் பாடகர் அர்ஜித் சிங் பாடல்களை பாடி ரசிகர்களுகளை உற்சாக படுத்த உள்ளார். மேலும், நடிகைகள் தமன்னா, ராஷ்மிகா ஆகியோரின் நடனமும் இன்றைய கலை நிகழ்ச்சிகளின் குறிப்பிடத்தகுந்தவையாகும்.

அந்த வகையில், இன்று நடைபெறும் இந்த தொடரின் தொடக்க போட்டியில், ஹர்திக் பாண்டியா தலைமையிலான நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் (Gujarat Titans) அணி, தோனி தலைமையிலான நான்கு முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியுடன் மோதுகிறது.

இன்று முதல் ஐபிஎல் டி20 - CSK vs Gujarat Titans

குஜராத் டைட்டன்ஸ்:

ஹர்திக் பாண்டியா (கேப்டன்), சுப்மான் கில், கே.எஸ் பாரத் (விக்கெட் கீப்பர்), விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), கேன் வில்லியம்சன், ராகுல் தெவாட்டியா, அபினவ் மனோகர், முகமது ஷமி, பிரதீப் சங்வான், சாய் கிஷோர், விஜய் சங்கர், சாய் சுதர்ஷன், ரஷித் கான், சிவம் மாவி, மேத்யூ வேட், ஒடியன் ஸ்மித், உர்வில் படேல், தர்ஷன் நல்கண்டே, டேவிட் மில்லர் (முதல் 2 ஆட்டங்களில் பங்கேற்க மாட்டார்), ஜோஷ் லிட்டில் (முதல் போட்டி பங்கேற்க மாட்டார்), யாஷ் தயாள், ஜெயந்த் யாதவ், ஒடியன் ஸ்மித், நூர் அகமது, அல்ஜாரி ஜோசப்.

இன்று முதல் ஐபிஎல் டி20 - CSK vs Gujarat Titans

சென்னை சூப்பர் கிங்ஸ்:

மகேந்திர சிங் தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அம்பதி ராயுடு, மொயீன் அலி, பென் ஸ்டோக்ஸ், ரவீந்திர ஜடேஜா, அஜிங்க்யா ரஹானே, சிசண்டா மகலா, ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, டுவைன் பிரிட்டோரியஸ், அஹய் மண்டல், நிஷாந்த், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், மிட்செல் சான்ட்னர், சுபர்ன்ஷு சேனாபதி, சிமர்ஜீத் சிங், மதீசா பத்திரனா, மகேஷ் தீக்ஷனா, பகத் வர்மா, பிரசாந்த் சோலங்கி, ஷேக் ரஷீத், துஷார் தேஷ்பாண்டே.

MUST READ