‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்திலிருந்து ‘கிஸ்ஸா’ பாடல் வெளியாகி உள்ளது.
சந்தானம் நடிப்பில் வெளியான தில்லுக்கு துட்டு 1, தில்லுக்கு துட்டு 2, டிடி ரிட்டன்ஸ் ஆகிய படங்கள் ஹாரர் கலந்த காமெடி கதைக்களத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து தற்போது டிடி நெக்ஸ்ட் லெவல் எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படமும் ஹாரர் காமெடி ஜானரில் உருவாகியிருக்கும் நிலையில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. இந்த படத்தை ஆர்யா தயாரிக்க பிரேம் ஆனந்த் இதனை இயக்கியுள்ளார். இந்த படத்தில் சந்தானத்துடன் இணைந்து செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன், யாஷிகா ஆனந்த், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, கஸ்தூரி மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்திற்கு ஆஃப்ரோ இசையமைக்கிறார். தீபக் குமார் பதி இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.
ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து சமீபத்தில் டப்பிங் பணிகள் தொடங்கியதாக படக்குழு அறிவித்தது. அடுத்தது இந்த படமானது 2025 மே மாதம் திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் இருந்து கிஸ்ஸா எனும் முதல் பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பாடலை ஆஃப்ரோ பாடியுள்ள நிலையில் கெளுத்தி இப்பாடல் வரிகளை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.