புனேவின் ஸ்வர்கேட் காவல் நிலையப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தில் 26 வயது பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். பாதிக்கப்பட்டவர் ஸ்வர்கேட் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காகக் காத்திருந்தார். அப்போது குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் அந்தப்பெண்ணிடம் அருகே வந்து இனிமையாகப் பேச்சுக் கொடுத்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். பின்னர் அவர் அந்தப் பெண்ணிடம் எங்கே போகிறீர்கள் எனக் கேட்டுள்ளார். தான் பால்டானுக்குப் போக வேண்டும் என அந்தப்பெண் கூற, சத்தாரில் பேருந்து இங்கே நிற்காது வாருங்கள் அங்கு நிற்கும் பேருந்தைக் காட்டுகிறேன் என இளைஞர் அந்தப்பெண்ணை அழைத்துச் சென்றுள்ளார்.
சிசிடிவி காட்சிகளில் அந்தப்பெண் குற்றம் சாட்டப்பட்டவருடன் பேருந்தை நோக்கி நடந்து செல்வது பதிவாகி உள்ளது. அந்தப் பெண் பேருந்தின் அருகே சென்றதும், பேருந்தின் உள்ளே இருட்டாக இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்ட இளைஞரிடம் கூறியுள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர் அந்தப்பெண்ணிடம், ‘இது ஒரு இரவு நேர பேருந்து’ என்று கூறியுள்ளார். எல்லோரும் தூங்கிக் கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் வேண்டுமானால், மேலே சென்று ஒரு டார்ச்சை அடித்துப் பார்க்கலாம் எனக் கூறியுள்ளார்.
அதை நம்பி இளம்பெண்ணும் பேருந்தில் ஏறியுள்ளார். உடனே அந்த இஞர் கதவை உள்ளே இருந்து பூட்டிவிட்டு அந்தப்பெண்ணை அலேக்காகத் தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். எல்லாம் முடிந்தபிற்கு குற்றம் சாட்டப்பட்ட ஆண் முதலில் பேருந்தில் இருந்து கீழே இறங்கியுள்ளார். பின்னர் இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு அந்தப் பெண் கீழே இறங்கி இருக்கிறார். அங்கிருந்து அந்தப்பெண் தனது நண்பர் ஒருவரை தொலைபேசியில் அழைத்து நடந்த விஷயத்தைக் கூறி உள்ளார். பிறகு தனது தோழியின் அறிவுரையின் பேரில், அந்தப்பெண் உடனடியாக ஸ்வர்கேட் காவல் நிலையத்துக்கு சென்று நடந்த சம்பவத்தைக்கூறி போலீசாரிடம் புகார் அளித்தார்.
குற்றம்சாட்டப்படவர் ஷிரூர் கிராமத்தில் வசிப்பவர் என்பது போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது தெரிய வந்தது. அவர் மீது பிரிவு 392-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த காமுகனைத்தேடும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று முதல் எட்டு தனிப்பைடை போலீசார் அந்த இளைஞரை தேடிருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பல கேள்விகள் எழுப்பப்படுகின்றன. ஒரு பேருந்திற்குள் ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறார். அது அருகில் உள்ள யாருக்கும் தெரியாது. பேருந்து பூட்டப்படாதது ஓட்டுநரின் தவறா? அல்லது நடத்துனரின் தவறா? அதே நேரத்தில், போலீஸ் ரோந்து குறித்தும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. ஸ்வர்கேட் காவல் நிலையம், காவல் குழு தொடர்ந்து ரோந்து செல்வதாகவும், ஆனால் காவல்துறையினர் ஒவ்வொரு பேருந்தையும் சோதனை செய்ய முடியாது என்றும் கூறுகிறது.