Homeசெய்திகள்சினிமாஇந்தியாவின் முதல் கடல் பேய் படம்.... ஸ்பெஷல் கேரக்டரை அறிமுகப்படுத்திய 'கிங்ஸ்டன்' டீம்!

இந்தியாவின் முதல் கடல் பேய் படம்…. ஸ்பெஷல் கேரக்டரை அறிமுகப்படுத்திய ‘கிங்ஸ்டன்’ டீம்!

-

- Advertisement -

இந்தியாவின் முதல் கடல் பேய் படம்.... ஸ்பெஷல் கேரக்டரை அறிமுகப்படுத்திய 'கிங்ஸ்டன்' டீம்!கிங்ஸ்டன் படக்குழு படத்தின் ஸ்பெஷல் கேரக்டரை அறிமுகப்படுத்தியுள்ளது.

பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ் தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வரும் நிலையில் இவருடைய நடிப்பில் உருவாகியுள்ள கிங்ஸ்டன் திரைப்படம் வருகின்ற மார்ச் 7ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.இந்தியாவின் முதல் கடல் பேய் படம்.... ஸ்பெஷல் கேரக்டரை அறிமுகப்படுத்திய 'கிங்ஸ்டன்' டீம்! இந்த படத்தை ஜி.வி. பிரகாஷ் தயாரித்து, நடித்து, இசை அமைத்துள்ளார். இதனை கமல் பிரகாஷ் இயக்கியுள்ளார். கோகுல் பினாய் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இந்த படத்தில் ஜி.வி. பிரகாஷுடன் இணைந்து திவ்யபாரதி, சேத்தன், அழகம்பெருமாள், ராஜேஷ் பாலச்சந்திரன் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இந்தியாவின் முதல் கடல் பேய் படம்.... ஸ்பெஷல் கேரக்டரை அறிமுகப்படுத்திய 'கிங்ஸ்டன்' டீம்!இந்த படமானது இந்தியாவின் முதல் கடல் பேய் படமாகும். எனவே படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. மேலும் இந்த படத்தின் டீசர் ஏற்கனவே சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் இன்று (பிப்ரவரி 27) இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட இருக்கிறது. அதன்படி சென்னையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது. இந்தியாவின் முதல் கடல் பேய் படம்.... ஸ்பெஷல் கேரக்டரை அறிமுகப்படுத்திய 'கிங்ஸ்டன்' டீம்!அந்த விழாவில் கிங்ஸ்டன் படத்தின் ஸ்பெஷல் கதாபாத்திரத்தை (கடல் பேய்- SEA GHOST) படக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது. இதைப் பார்த்த ரசிகர்கள் அப்படியே ரியலிஸ்டிக்காக இருப்பதாகவும் பயமாக இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் கமெண்ட் செய்து வருவதோடு இந்த புகைப்படங்களையும் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

MUST READ