ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தின் சல்மான் கான் நடிக்கும் சிக்கந்தர் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஏ.ஆர். முருகதாஸ் தீனா, ரமணா, ரஜினி, கத்தி, துப்பாக்கி என பல வெற்றி படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இவர் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் மதராஸி எனும் திரைப்படத்தையும் இயக்கி வருகிறார். அதே சமயம் இவர், மீண்டும் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்து சல்மான் கான் நடிப்பில் சிக்கந்தர் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் சல்மான் கான் உடன் இணைந்து சத்யராஜ், ராஷ்மிகா மந்தனா, காஜல் அகர்வால், சுனில் ஷெட்டி மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த படத்தை சஜித் நதியத்வாலா தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருப்பதாக சொல்லப்படுகிறது. அதன்படி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இந்த படமானது இந்த ஆண்டு ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வர தயாராகி வருகிறது. இதற்கிடையில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் சல்மான் கானின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் டீசர் ஒன்று வெளியிடப்பட்டது.
அதைத்தொடர்ந்து தற்போது ஃபிலிம் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டீசரில் சல்மான் கான் ஆக்ஷன் காட்சிகளில் பட்டைய கிளப்புகிறார். மேலும் நடிகர் சத்யராஜ் இந்த படத்தில் அமைச்சராக நடித்துள்ளார். இந்த டீசர் தற்போது ரசிகர்களின் கவனம் இருந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.