நடிகர் ஆதி தன்னுடைய அடுத்தடுத்த படங்கள் குறித்து பேசி உள்ளார்.
நடிகர் ஆதி தமிழ் சினிமாவில் மிருகம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். அதைத்தொடர்ந்து இவர் ஈரம், அய்யனார், மரகத நாணயம் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். தற்போது இவர் ஈரம் படத்தின் இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சப்தம் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகியுள்ள இப்படம் இன்று (பிப்ரவரி 28) திரையரங்குகளில் வெளியாகிறது. இதைத்தொடர்ந்து நடிகர் ஆதி, மரகத நாணயம் 2 திரைப்படத்தில் நடிக்க உள்ளார். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசிய ஆதி தன்னுடைய அடுத்தடுத்த படங்கள் குறித்து பேசி உள்ளார்.
#AadhiPinisetty in recent interview
– I really want to do films fast and this year everyone will ask why are you doing this much films.
– Already two film shoot is over, one is releasing in OTT and another one in theatres#Sabdhampic.twitter.com/RqdznG9xwn— Movie Tamil (@MovieTamil4) February 27, 2025
அதன்படி அவர் பேசியதாவது, “நான் வேகமாக படம் பண்ண விரும்புகிறேன். இந்த வருஷம் கண்டிப்பா என்னுடைய நிறைய படங்கள் வெளியாகும். ஏற்கனவே இரண்டு படங்கள் முடிந்து விட்டது. ஒரு படம் ஓடிடியில் வெளியாகிறது. ஒரு படம் தியேட்டரில் வெளியாகிறது. மரகத நாணயம் 2, டிஸ்கோ ஆகிய படங்களை இந்த வருடத்தில் முடிக்க திட்டமிட்டு இருக்கிறேன். ரசிகர்களுக்கும் இது பிடிக்கும் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.