Homeசெய்திகள்சென்னைசொத்துவரி செலுத்தாத ரோகிணி திரையரங்கம்

சொத்துவரி செலுத்தாத ரோகிணி திரையரங்கம்

-

சொத்துவரி செலுத்தாத ரோகிணி திரையரங்கம்

சென்னை ரோகிணி திரையரங்க விவகாரத்தில் திரையரங்கில் நரிக்குறவ சமூகத்தினருக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் திரையரங்க ஊழியர்கள் இருவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரோகிணி திரையரங்கத்திற்கு ஒரு வாரம் தடையா? போலீஸ் திடீர் நோட்டீஸ்  அனுப்பியதால் பரபரப்பு

நரிக்குறவர்களை படம் பார்க்க அனுமதிக்காத விவகாரத்தில் நேரில் ஆஜராக ரோகிணி திரையரங்கு நிர்வாகிகளுக்கு காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதுமட்டுமின்றி, ரோகிணி திரையரங்கம் மற்றொரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. அதாவது, 2022-2023 நிதியாண்டில் மட்டும் அந்த திரையரங்க நிர்வாகமானது 3.69 லட்சம் ரூபாய் சொத்து வரி செலுத்தவில்லை என்றும் இதற்காக மாநகராட்சி 10000 ரூபாய் அபராதம் விதித்திருப்பதும் தெரியவந்திருக்கிறது.

அதுமட்டுமின்றி கடந்த காலங்களில் நிலுவையிலிருக்கும் 24 லட்சம் ரூபாய் சொத்து வரி தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்துகொண்டிருப்பதும் தெரியவந்திருக்கிறது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் ரோகிணி திரையரங்கத்தின் அடுத்த தில்லாலங்கடி வேலை வெளிப்பட்டிருக்கிறது என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

MUST READ