சென்னை கோயம்பேட்டில் ராபிடோ ஓட்டுநர்கள் மீது ஆட்டோ ஓட்டுநர்கள் தாக்குதல் நடத்தியதில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் விமான நிலையம், சென்ட்ரல் எழும்பூர் ரயில் நிலைய பகுதிகளில் ராபிடோ(Rapido) பைக் ஓட்டுநர்கள் முகாமிட்டிருப்பார்கள்.
விமானம், ரயில், பேருந்து பயணங்களை முடித்துவிட்டு வரும் தனி நபர்கள் குறைந்த கட்டணம் என்பதால் பெரும்பாலும் Rapido appல் புக்கிங் செய்து தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்வார்கள்.
அதுபோன்று கோயம்பேடு பேருந்து நிலையப் பகுதியில் வாடிக்கையாளர்களுக்காக காத்திருந்த ராபிடோ ஓட்டுநர்களை, ஆட்டோ ஓட்டுநர்கள் அடிக்கடி தாக்குவதாக புகார்கள் எழுந்தன.
இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என ரேபிடோ ஓட்டுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் வழக்கம் போல் நேற்று கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே நின்ற ரேபிடோ ஓட்டுநர் ஒருவரை ஆட்டோ ஓட்டுனர் திட்டிக் கொண்டு அருகில் இருந்த கல்லால் தாக்க முயற்சி செய்தது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
எனவே தங்கள் மீது தொடர்ந்து தாக்குதல் ஈடுபட்டு வரும் ஆட்டோ ஓட்டுநர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரேபிடோ ஓட்டுநர்கள் 50க்கும் மேற்பட்டோர் சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு திரண்டு புகார் அளித்துள்ளனர்.