Homeசெய்திகள்சென்னை247 தமிழ் எழுத்துக்களால் உருவான 4 அடி திருவள்ளூர் சிலை: பள்ளி மாணவர்கள் அசத்தல்

247 தமிழ் எழுத்துக்களால் உருவான 4 அடி திருவள்ளூர் சிலை: பள்ளி மாணவர்கள் அசத்தல்

-

- Advertisement -

தமிழில் உள்ள 247 எழுத்தால் உருவான திருவள்ளூர் சிலை! தமிழை மாணவர்களுக்கு  கொண்டு செல்லும் வகையில் தனியார் சிபிஎஸ்ஐ பள்ளி அசத்தல்.

247 தமிழ் எழுத்துக்களால் உருவான 4 அடி திருவள்ளூர் சிலை: பள்ளி மாணவர்கள் அசத்தல்சென்னை திருமுடிவாக்கத்தில் உள்ள ஜெயின் பப்ளிக் என்ற  தனியார்   சிபிஎஸ்ஐ  பள்ளியில் புதிதாக திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டுள்ளது.ஸ்டீல் மெட்டலில் 4 அடி உயரமும் 4 அடி அகலத்தில்  247 தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு  தமிழ் மீதும் திருக்குறள் மீதும் உள்ள ஆர்வத்தை தூண்டும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த திருவள்ளூர் சிலையை திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் திறந்து வைத்தார்.அப்போது திருக்குறளை பாடலாக பாடி சிபிஎஸ்ஐ மாணவர்கள் அசத்தினர்.

247 தமிழ் எழுத்துக்களால் உருவான 4 அடி திருவள்ளூர் சிலை: பள்ளி மாணவர்கள் அசத்தல்விழாவில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் திருக்குறள் ஒவ்வொரு திராவிடர் கையிலும் இருக்க வேண்டும், திராவிடர் நீதி திருக்குறள் என்று கூறியவர் பெரியார், தமிழினம் மேம்பட ஒவ்வொரு நாளும் திருக்குறளையும் திருவள்ளுவரையும் நினைக்க வேண்டும்.

திருவள்ளுவர் சிலையை நிறுவியதோடு தந்தை பெரியாரையும் அவரது புகழையும் பள்ளி மாணவர்கள் அறிந்து கொள்ள செய்துள்ளதற்கு பள்ளி நிர்வாகத்தை பாராட்டினார்.

MUST READ