முதலமைச்சர் தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் புஸ்ஸி ஆனந்த் கலந்து கொண்டது குறித்து ஊடகவியலாளர் இந்திரகுமார் தேரடி கடுமையாக விமர்சித்துள்ளார்.
சென்னை கிழக்கு மாவட்டம், அம்பத்தூரில் நடைபெற்ற ”பொதுவாழ்வில் நேர்மையானவர், புது வாழ்வில் விடியளானவர்” எனும் புகழரங்க நிகழ்ச்சியில் பேசிய, ஊடகவியளாளர் இந்திரகுமார் தேரடி, ”முதலமைச்சர் தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் புஸ்லி ஆனந்த் கலந்து கொண்டார்.
ஒரு பொம்மையை கட்சித் தலைவர் அனுப்பி உள்ளார். தமிழ்நாட்டின் உரிமையை பற்றி பேப்பர் பார்த்து பேசும் பனையூர் பால்வாடி பண்ணையாரே… தமிழ்நாட்டிற்கு விடிவு வரப்போகிறதா? அழிவு தான் வரும்.
நான் ஊடகவியலாளர் என்பதற்கு முன்னால் மானமுள்ள தமிழன். சுயமரியாதை உள்ள தமிழன். அந்த சுயமரியாதைக்கும், மானத்திற்கும் பங்கம் நேரும் என்றால் சுயமரியாதையையும், மானத்தையும் காப்பதற்கு யார் குரல் கொடுக்கிறார்களோ? அவர்களுக்கு பின்னால் செல்ல வேண்டியது இந்த தமிழ்நாட்டு மக்களுடைய கடமை. அது அவர்கள் கடந்த காலத்தில் செய்திருக்கிறார்கள். அதனால் தான் 1967-ல் டெல்லி தமிழகத்திற்கு போட்ட பூட்டை இன்றைக்கு வரைக்கும் உடைக்க முடியாமல், செருப்பு இல்லாமல் சாட்டையை அடித்துகொண்டு திரிகிறார் அண்ணமாலை.
நீ சாட்டையை அடித்துக்கொண்டே திரிய வேண்டியது நடந்து கொண்டே இருக்க வேண்டியதும் தான். அடுத்த 2026 தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்து விடுவோம் என்று கனவு கண்டிருப்பவரை தண்ணியை அடித்து எழுப்பி விடுங்கள்” என விமர்சித்துள்ளார்.