- Advertisement -
பெண் ஊழியர்களுக்கு எல்&டி நிறுவனம் ஒரு நற்செய்தி அறிவித்துள்ளது. பெண் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் ஒரு நாள் மாதவிடாய் விடுப்பு வழங்கப்படும் என எல்&டி நிறுவனம் தெரிவித்துள்ளது. மகளிர் தின கொண்டாட்ட நிகழ்ச்சியின்போது எல்&டி நிர்வாக இயக்குனர் எஸ்.என்.சுப்பிரமணியன் இந்த அறிவிப்பு வெளியிட்டார். ஒரு நாள் மாதவிடாய் விடுப்பால் எல்&டி நிறுவனத்தில் பணிபுரியும் 5,000 பெண் ஊழியர்கள் பயன்பெறுவர்கள் என்று தெரிவித்துள்ளார்.