Homeசெய்திகள்அரசியல்நடிகையின் இடுப்பில் ஆட்டுக்குட்டி… மே மே மே: அண்ணாமலையை கலாய்த்த எஸ்.வி.சேகர்..!

நடிகையின் இடுப்பில் ஆட்டுக்குட்டி… மே மே மே: அண்ணாமலையை கலாய்த்த எஸ்.வி.சேகர்..!

-

- Advertisement -

அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக பதவியேற்றது முதல் அவரை பயங்கரமாக கலாய்த்து, விமர்சித்து வருகிறார் நடிகர் எஸ்.வி.சேகர். சமூகவலைதளங்களில் அண்ணாமலையை கலாய்த்து எஸ்.வி.சேகர் பகிரும் பதிவுகள் குறுபுத்தனமாகவே இருந்து வருகிறது.

”தமிழ்நாட்டில் பாஜக 25 ஆண்டுகள் ஆனாலும் ஆட்சிக்கு வரவே முடியாது. ஒழுங்காக படிக்காத காரணத்தால் தான் அண்ணாமலை அரசியலுக்கு வந்தார். இங்கு சரியாக இல்லை என்று தான் வெளிநாடு படிக்க சென்று இருக்கிறார்.

2026 ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நிச்சயம்... அடித்துச் சொல்லும் அண்ணாமலை!அண்ணாமலை வாயை திறந்தால் பொய். தமிழகத்தில் ஒரு பிராமணர் கூட இல்லாமல் அனைவரையும் ஒழித்துக் கட்டிவிட்டார். சும்மா திமுகவை திட்டிக் கொண்டிருந்தால் அவர்களால் வளரவே முடியாது” என்றெல்லாம் அண்ணாமலை குறித்து விமர்சித்து வருகிறார் எஸ்.வி.சேகர்.

பிரபல நடிகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை....... சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு!

https://x.com/SVESHEKHER/status/1897608873214714230

இந்நிலையில், எஸ்.வி.சேகர் தனது எக்ஸ்தளப் பதிவில், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் ஒரு ஆட்டுக் குட்டியை கையில் வைத்தபடி உள்ள புகைப்படத்தைப் பகிர்ந்து ”நம்மாளு ஆள் இந்தியா புகழ் ஆயிட்டாரு…. ஜான்விகபூர் கையில நம்ம மாநிலத்தலை. ஒரு சல்யூட் போடுங்க. மே மே மே..” எனக் கலாய்த்துள்ளார்.

MUST READ