Homeசெய்திகள்க்ரைம்அமெரிக்கர்கள்- வெளிநாடுவாழ் இந்தியர்களை குறிவைத்து மோசடி- 62 பேர் கைது

அமெரிக்கர்கள்- வெளிநாடுவாழ் இந்தியர்களை குறிவைத்து மோசடி- 62 பேர் கைது

-

- Advertisement -

அமெரிக்கர்களும் வெளிநாடுவாழ் இந்தியர்களும் குறிவைத்து பே பால் என்ற பெயரில்  கால் சென்டர் வைத்து மோசடியில் ஈடுப்பட்ட 62 பேரை கைது செய்த தெலங்கானா சைபர் க்ரைம் போலீசார்.அமெரிக்கர்கள்- வெளிநாடுவாழ் இந்தியர்களைள குறிவைத்து மோசடி- 62 பேர் கைதுதெலங்கானா மாநிலம்  ஐதராபாத்தைச் சேர்ந்த சந்தா மனஸ்வினி, மாதப்பூரில், எக்ஸிட்டோ சொல்யூஷன்ஸ் என்ற கால் சென்டரைத் தொடங்கியுள்ளார். இதில் பணிபுரிய வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் சேர்க்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் அமெரிக்க குடிமக்கள், என்.ஆர்.ஐ. களை போனில் அழைத்து பே-பால் ஊழியர்கள் போல் நடிப்பார்கள். இதற்காக துபாயைச் சேர்ந்த ஆசாத், விக்கி மூலம் பே – பால் கணக்கு விவரங்களைச் சேகரித்து வந்துள்ளார். இலக்கு வைக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு முதலில் மின்னஞ்சல் அனுப்பப்பட்டு வாடிக்கையாளர் சேவை மைய எண் முதலில் வழங்கப்படும்.

வாடிக்கையாளர்கள் அந்த எண்ணை அழைத்தால், மனஸ்வினி குழுவினர் உங்கள் பே-பால் கணக்கில் $500-1000 வரை சட்டவிரோத பரிவர்த்தனைகள் நடந்ததாக அவர்கள் கூறுவர்.  பே-பால் நிறுவனத்திலிருந்து பெறப்பட்ட கூடுதல் பணத்தைத் திருப்பித் தராவிட்டால் சட்ட நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் மிரட்டி வந்துள்ளனர். அவ்வாறு அமெரிக்க குடிமக்களிடமிருந்து மிரட்டி பெறப்பட்ட பணம் பல்வேறு கணக்குகள் மூலம் கிரிப்டோகரன்சியாக மாற்றப்பட்டு துபாய்க்கு அனுப்பப்பட்டது.

இந்த மோசடியின் மூளையாக குஜராத்தைச் சேர்ந்த கைவன் படேல் என்ற ஜாது பாய், துபாயில் வசிக்கும் அவரது சகோதரர் விக்கி மற்றும் அவர்களது மற்றொரு கூட்டாளி ஆசாத் ஆவர். இந்த  மூவரும் தலைமறைவாக உள்ள நிலையில் மனஸ்வினி இந்த கால் சென்டரை அவர்களுடன் இணைந்து நடத்தி வந்துள்ளார்.

இதில்  22 பெண்கள் மற்றும் 41 ஆண்கள் இவர்களுக்காக பணி புரிந்து வந்துள்ளனர்.  மனஸ்வினி உட்பட அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உத்தரவுப்படி  14 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளபட்டுள்ளதாக சைபர் பாதுகாப்பு  தலைமை இயக்குநர் ஷிகா கோயல் தெரிவித்துள்ளாா்.

இதில் வடகிழக்கு மாநிலங்களிலிருந்து பிழைப்புக்காக ஐதராபாத் வந்த இளைஞர்களை, கால் சென்டர் நடத்துபவர்களின் வலையில் சிக்கிக் கைது செய்தது சரியான முடிவா என செய்தியாளர்கள் கேட்டபோது சைபர் க்ரைம் டி.ஜி. கோயல் பேசுகையில் அவர்கள் அனைவரும்  கால் சென்டரில் பணிபுரிந்து அங்கு அவர்கள் சட்டத்திற்கு புறம்பான குற்றங்களைச் செய்வதாக தெரிந்தே செய்தனர். அதனால்தான் அவர்கள் கைது செய்யப்பட்டதாக கூறினார்.

தெலுங்கானாவில் சைபர் குற்றங்களை முற்றிலுமாகத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.  மாதப்பூர் கால் சென்டரில் பணிபுரிந்த அனைவரும் அமெரிக்க நேரப்படி ஷிப்டுகளில் வேலை செய்து வந்துள்ளனர்.  இதுபோன்ற ஷிப்டுகளில் இயங்கும் கால் சென்டர்களில்  போலீசார் ஆய்வுகளை மேற்கொண்டு அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைக் கண்காணிக்க வேண்டும் என்று கோயல் பரிந்துரைத்தார்.

ஈரோட்டில் ஒடிசா இளைஞர் கொலை: பணம் தர மறுத்ததால் வட மாநில தரகர்கள் வெறிச்செயல்..!

MUST READ