Homeசெய்திகள்சினிமா'பெருசு' படத்தின் கலகலப்பான ட்ரெய்லர் வெளியீடு!

‘பெருசு’ படத்தின் கலகலப்பான ட்ரெய்லர் வெளியீடு!

-

- Advertisement -

பெருசு படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.'பெருசு' படத்தின் கலகலப்பான ட்ரெய்லர் வெளியீடு!

பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தனது ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ள திரைப்படம் தான் பெருசு. இந்த படத்தில் வைபவ், சுனில், நிஹாரிகா, பால சரவணன், விடிவி கணேஷ், முனீஸ்காந்த், தீபா, கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை இளங்கோ ராம் இயக்கியிருக்கிறார். சத்ய திலகம் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க அருண்ராஜ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சூர்யா குமாரகுரு இதன் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படமானது இறுதிச் சடங்கு தொடர்பான கதைக்களத்தில் நகைச்சுவை கலந்த குடும்பப் பொழுதுபோக்கு படமாக அமைந்திருக்கிறது. ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து படத்திலிருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும் டீசரும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. எனவே வருகின்ற மார்ச் 14ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வரும் இந்த படத்தின் டிரைலரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த ட்ரெய்லரை பார்க்கும்போது இறந்த முதியவரின் உடலை அடக்கம் செய்வதில் ஏற்படும் சொல்ல முடியாத சில சிக்கல்களை நகைச்சுவையான கதையில் சொல்லியிருப்பது போல் தெரிகிறது. அதாவது இது அடல்ட் காமெடி படம் என்பது குறிப்பிடத்தக்கது. கலகலப்பான இந்த ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ